பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றப் பதிகம் 129 பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே என்ற தொடரில் மிக அழகாக விளக்கியுள்ளார். அக்கருத்தை அடிகளார் நச்சி நச்சிட வந்திடும் காலமே' என்கிறார். 'உனை நச்சி நச்சிட என்பதில் உள்ள உனை’ என்பதற்குக் காலமே என்பது பொருளாகும். இறைவன் காலதத்துவமாக உள்ளான் என்பதை மிக விரிவாக “ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே உனை என்று கொல் காண்பதே" (திருவாசகம்:47) என்று முன்னரும் பாடியுள்ளார் அல்லவா? அதனையே இங்கு மீ ண்டும் “காலமே உனை ஒத” என்றார். குருநாதர் வடிவம் பருப்பொருளாக ஊனக் கண்ணால் காணக்கூடிய முறையில் அமைந்திருந்தது. அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது மறைந்து அகக்கண்ணால் மட்டும் காணக்கூடிய உமையொரு பாகன் வடிவம் காட்சி தந்தது. சற்று நேரத்தில் அதுவும் மறைந்து தில்லைக் கூத்தனின் வடிவம் காட்சி தந்தது. இந்த முறைவைப்பிலும் ஒரு சிறப்பு இருத்தலைக் கவனித்தல் வேண்டும். அமைதியாக இருந்த குருநாதர் வடிவம் பருப்பொருளால் ஆயது. அது மேலும் நுண்மை பெற்று அசைதல் இல்லாத உமையொரு பாகனாகக் காட்சி தந்தது. இப்போது அது, மேலும் நுண்மை பெற்றுக் குரு, உமையொருபாகன் என்ற இரண்டு வடிவுகட்கும் அப்பாற்பட்டு மூலமாய் இருப்பது ஓயாது சலித்துக் கொண்டிருக்கும் தில்லைக் கூத்தன் வடிவே என்பதை அடிகளார் உணருமாறு அந்த மூன்று காட்சிகளும் கிடைத்தன. - சலித்துக்கொண்டிருக்கும் தில்லைக் கூத்தன் வடிவம் தான் முடிவானது (ultimate) என்று நினைப்பவர்கட்கு அதை அடுத்தும் ஒன்று உள்ளது என்பதைத் தெரிவிக்கவே பருப்பொருள்தன்மை, நுண்பொருள்தன்மை என்ற