பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அடுத்துள்ளது ஏதிலார் ஏதமே பலபேச என்பதாகும். ஏதிலார் என்ற சொல் அயலார், பகைவர் என்ற இரண்டு பொருள்களையும் உடையதாகும். அமைச்சராக இருந்த ஒருவருக்குப் பகைவர் மிகுதியாக இருப்பர் என்பதில் ஐயமி ல்லை. அப்படிப்பட்டவர்கள் அமைச்சர் நல்லது செய்தாலும் அதில் ஏதோ ஒரு குற்றம் காண முற்படுவர். எனவே, ஏதிலார் ஆகிய பகைவர் ஏதமே பல பேச என்பது பண்டைய நிலையைக் குறித்ததாயிற்று. அப்படியானால், எல்லாவற்றையும் துறந்து ஆண்டியாகத் திரியும் இவரை அயலாராயினும் பகைவராயினும் குற்றம் பேச என்ன நிகழ்ந்தது என்ற வினாவை எழுப்பினால், உலகியல்பற்றிய சுவையான விடை கிடைக்கும். இப்பொழுது பகைவர், அயலார் என்ற இரு தரத்தாரும் இவர்மாட்டுக் குற்றம் சாட்டிப் பழி தூற்று கின்றனர். அதுவும் இரு வகைப்படும். அமைச்சராக இருந்தபொழுது இருந்த பகைவர்கள் ஆண்டியான இவரைப் பார்த்து எங்களுக்கு அப்பொழுதே தெரியும், இந்த அமைச்சர் போகிற போக்கில் இவர் ஆண்டியாகத்தான் முடிவார்’ என்று தம் பகைமையை வெளிப்படுத்தினர். இதன் எதிராக, இவர்மாட்டுப் பகைமையோ நட்போ பாராட்டாமல் அயலாராக இருந்தவர்களும் இப்போது குற்றம் சாட்டுகிறார்கள். அமைச்சராக இருந்து, பலருக்கும் நன்மை செய்து நாட்டை நல்வழியில் செலுத்தவேண்டிய இவர், பதவியைத் துறந்து ஆண்டி வேடம் கொண்டது மிகத் தவறு என்று அவர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். 'ஏதிலார் ஏதமே பல பேச என்பதன் பொருள் இதுவேயாகும். இவற்றை எடுத்துக்கூறிய அடிகளார், ‘ஐயனே! பகைவர், அயலார் என்ற இரு தரத்தாரும் என்மேல் குற்றம் சுமத்தும் அளவிற்குத் திருப்பெருந்துறை