பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 "மயக்கத்தைத் தரும் அஞ்ஞானத்தைப் போக்கினாய்; பழமையான மும்மலங்களின் காரியமாகத் தோன்றும் வினைகளுக்குள் அழுந்தும் என் மெலிவைப் போக்கினாய்; என்னை ஆட்கொள்ளவும் செய்தாய். திருப்பெருந்துறையில் தூய மலர் போன்ற உன் திருவடிகளைத் தந்தாய். திடீரென்று நிகழ்ந்த இப்பெரும் மாற்றங்களினால் மயங்கி இருந்த என் மயக்கத்தைப் போக்கி (கயக்கு அறுத்து அடியார்களுடன் வந்து பெருந்துறையில் காட்சி தந்தாய்; அதே காட்சியைக் கழுக்குன்றில் நல்கினாய்’ என்க. திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டது முதல் அடிகளாரின் மனத்தில் ஓங்கி யிருந்தது ஒரே ஒரு கவலைதான். குருநாதர் தரிசனத்திற்குச் &#LOLDIT5 அவருடைய மனத்தை ஆட்கொண்டது அங்குக் கண்ட அடியார் கூட்டத் தரிசனமாகும். மறுபடியும் அதனைக் காணவேண்டும் என்பதே அந்தக் கவலையாகும். அடியார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ என்றும் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்” (திருவாச:378) என்றும் வரும் பகுதிகளில் அவர் மனத்தில் இருந்த பெருங்கவலையை அறிவுறுத்துகிறார். திருக்கழுக்குன்றத்தில் அவருடைய இரண்டு பெரு விருப்பங்களும் நிறைவேறின. குருநாதரின் கோலத்தைக் காணமுடிந்தது என்பதைக் கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்ற பகுதியிலும் 'அடியார்முனே வந்து காட்டினாய்’ என்பதால் பெருந்துறையில் கண்ட அந்த அடியார் கூட்டத்தை மறுபடியும் காண முடிந்தது என்பதையும் கூறினாராயிற்று.