பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அடிகளார் தம்மை ஒரு சராசரி மனிதராகக் கருதிக்கொண்டு அவர்கள் அடையும் முடிவைத் தம்மேல் ஏற்றிக்கொண்டு பேசுகிறார். இந்திரிய வயம் மயங்கியவர்கள் மரணத்தையே முடிவாக உடையவர்கள். இந்த மரணத்துக்குக் காரணமாய் அமைவது அந்த இந்திரியங்களுக்கு அடிமைப்படுதலே ஆகும். அவ்வாறு அடிமைப்பட்டு இறப்பவர்கள் அந்தரமே சென்று (எமனுலகம் சென்று இறுதியாக அருநரகில் வீழ்கின்றனர். பிறப்பு இறப்பு என்பவை சாதாரண, சராசரி மனிதர்களின் வாழ்வின் தொடக்கமும் இறுதியும் ஆகும். நூறு தாமரைப் பூக்கள் நீர்மட்டத்திலேயே நின்றுவிட, ஒரு தாமரைப்பூமட்டும் நீர்மட்டத்தைவிட ஒர் அடி மேலோங்கி வளர்ந்திருப்பதைக் காண்கிறோம். சராசரி மனிதர்களைப் போல அருநரகில் விழும் நிலையில் இருந்த அடிகளாருக்குத் திருப்பெருந்துறைக் குருநாதர் இரண்டு காரியங்களைச் செய்தார். அந்த இரண்டு காரியங்கள் 'சிவம் ஆக்குதலும்', 'ஆண்டு கொள்ளுதலும் ஆகும். இவை முன்பின்னாகப் பேசப்பெற்றிருப்பினும் நடை பெற்றதைச் சிந்திக்கும்போது ஆண்டது முதலிலும் சிவமாக்குதல் இரண்டாவதாகவும் நடைபெற்றமையை அறியமுடிகிறது. - குருநாதர் தம் கண்களிலிருந்து புறப்பட்ட அருளை அடிகளார்மேல் பாய்ச்சியதால் திருவாதவூரர் பெரு மாறுதலை அடைந்தார். ஆட்கொள்ளுதல் நயனதீட்சை மூலம் நடைபெற்றது என்று நினைப்பதில் தவறில்லை. அடுத்தபடியாக உள்ளது 'சிவம் ஆக்குதல் ஆகும். 'அப்பொடு சேர்ந்த உப்பேபோல’க் குருநாதரின் திருவடி சம்பந்தம் பெற்றவுடன் திருவாதவூரர் சிவமாகினார். நயன தீட்சையால் திருவாதவூரர் என்ற மனிதருக்குரிய கருவி