பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 143 கொண்டான். பரா அமுதாகிய திருவாசகம் சொட்டுச் சொட்டாகத் தொடங்கி அருவிபோல் பாயத் தொடங்கிற்று. அவன் கருணையை வியக்கின்ற அதே நேரத்தில், தம்முடைய சிறுமையைப்பற்றி மிக அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியதால், அருவிபோல் வந்த பாடல், வேகம் குறையத் தொடங்கிற்று. இதனை அறிந்த தில்லைக் கூத்தன், திருப்பெருந்துறையில் இறையனுபவத்தைக் கொடுத்துப் பிடுங்கியதுபோல, ஒரு விநாடி நேரம் தம்முடைய பழமையைப் புறத்தே நின்று காணும் ஆற்றலை அடிகளாருக்குத் தில்லையில் தந்தான். உருத் தெரியாக் காலத்தில்கூடப் புறத்தே இருந்த கூத்தன் உள்புகுகின்ற காட்சி தெரிகிறது; உள்ளே புகுந்தவன் வெளியே வராமல் உள்ளத்தின் அடித்தளத்தில் நிலைபெற்றுவிட்ட காட்சி தெரிகிறது. பத்து மாதங்களும் அந்தக் கரு அழியாமல் முழு வடிவுபெறக், கூத்தன் அருள் செய்தமை தெரிகிறது; வளர்ச்சியடையும்போது 'தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி’ முனிவிலாதது ஒரு பொருளைக் கருதிய நிலை தெரிகிறது. எங்கெங்கோ ஒளித்த சோரன் அகப்பட்டுக்கொண்ட நிலை தெரிகிறது. அவனைத் தாள்தலையிட்டு தம்முன் நிறுத்திக்கொண்ட நிலை தெரிகிறது. அந்த ஆனந்த வெள்ளத்தில் அப்படியே அமிழ்ந்துபோகும் நிலையில் தூண்டில் மீனைப்போலத் தில்லைக்கூத்தன் மணிவாசகரை வெளியே இழுத்து விடுகிறான். - இந்த ஆனந்த வெள்ளத்தில் அழுந்தி அதிலேயே நிலைபெறுவதற்குரிய தகுதி வந்துவிட்டது உண்மைதான். ஆனால், அதனை அனுபவிக்கத் தொடங்குவதற்குள் இன்னும் சில பாடல்கள் புனையப்பட வேண்டும். எனவே, தில்லைக் கூத்தன் இந்தப் பின்னோக்குப் பார்வையைத் தடுத்துவிடுகிறான்.