பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 153 ஒருவனைத்தான் அடிகளார் 'வெறுவியன்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். பாடலின் முதல் இரண்டு அடிகளில் தம்பால் உள்ள பல குறைகளை எடுத்து அடுக்கிக் கூறிவிட்டு, அப்படி இருந்தும் தம்மை வந்து ஆண்டான் ஒருவன் என்று பேசுகிறார். இவ்வாறு கூறுவதால், தம்மை வந்து ஆண்ட்வனை எளிதாக யாரும் நினைந்துவிடக்கூடாது என்பதை அறிவுறுத்தப் போலும் களவிலா வானவரும் தொழும்’ என்றார். களவு-வஞ்சனை, களவிலா வானவர் தொழுதார்களே தவிர என்ன பயன் பெற்றார்கள் என்று தெரியாது. ஆனால், அளவிலா பாவகத்தில் அமுக்குண்ட ஒருவருக்கு வந்து அருள் செய்தான் என்றால் அவன் கருணையின் எல்லை இருந்தவாறு என்னே என்று வியக்கிறார். ‘வானவரும் என்பதில் வரும் உம்மை உயர்வு சிறப்பு உம்மை; கிடப்பேனுக்கு என்பதில் இழிவுச் சிறப்பு உம்மை தொக்கது. - 483. பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே 9 இப்பாடலில் முதலடியில் 'பாங்கினொடு பரிசொன்றும் அறியாத' என்ற சொற்களை அடிகளார் பயன்படுத்துவது அவர்காலத்தில் வழங்கிய ஒரு வழக்கைத் தெரிவிப்பதுபோல் உள்ளது. 'பாங்கு என்ற சொல்லும் 'பரிசு என்ற சொல்லும் பல பொருள்களையுடைய சொற்களாயினும் இங்கே நன்மை, குணம் என்ற பொருள்களையே முறையே குறிப்பனவாகும். எனவே, நன்மையான குணம் அல்லது நற்குணம் ஒன்றும் இல்லாத நாயினேன் என்று அடிகளார் தம்மைச் சொல்லிக் கொள்கிறார். $.4.4.IV ti