பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 163 அடியார் நின் அருள் பெற்றார் என்று கூறாமல் “அடியார் சிலர் என்று அத்தொகுப்பினுள் சிலரைப் பிரித்தெடுத்துக் கூறவேண்டிய காரணம் என்ன? உலகில் வாழும் அடியார் பலரேனும் அவர் அனைவரும் அருளைப் பெற்றார் என்று கூறுவதற்கில்லை. அருளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருத்தலாலேயே அவர்கள் அடியார்கள் ஆயினர். அவர்களிடம் அருளைப் பெறும் ஆர்வம் உண்டு. ஏனைய பலவற்றோடு இந்த ஆர்வமும் அவர்கள் மனத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. ஆனால், அவர்களில் ஒரு சிலர்க்கு இந்த ஆர்வம் மேலும், மேலும் வளர்ந்து அவர்கள் மனத்தில் வேறு ஒன்றிற்கும் இடமின்றி நிறைந்துவிட்டது. ஆர்வம் கூர' என்று பொதுவாகக் கூறியமையின் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களிலும் இந்த ஆர்வமே வளர்ந்து, நிறைந்து, அந்த நான்கினையும் தன்னுள் அமிழ்த்திக்கொண்டது அவ்வாறு அமிழ்த்திக் கொண்ட காரணத்தால், அந்தச் சிலர் தின் அருளைப் பெற்றார். ஆர்வம் கூர்கின்ற காரணத்தால் அருளாகிய பயன் கிட்டியது. 'அருள் பெற்றார்’ என்பதிலும் ஒரு நயம் அமைந்துள்ளது. இவர்கள் ஆர்வம் நிறைந்த காரணத்தால், அருளைத் தந்தேதீரவேண்டிய கடப்பாடு, இறைவனுடையதாக ஆகிவிடுகிறது. ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்குதலை, பெறுதல் என்ற சொல்லால் குறிக்கின்றோம். ஆர்வம் கூர்தலால் அருள் பெறப்பட்டது 意了@Tég. 'யான்' என்பது தொடங்கி மூக்கின்றேன்’ என்பது முடியவுள்ள சொற்கள், தம் உடம்பின்மேல் அடிகளார் கொண்டிருந்த வெறுப்பை உணர்த்துவன ஆகும். பல இடங்களிலும் தம் உடம்பை இவ்வாறு அடிகளார் வெறுத்துப் பேசுவதைக் காண்கின்றோம். அதற்குரிய