பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 167 கொண்டிருத்தலின், உடலாலும் மனத்தாலும் 'எய்த்தேன்’ என்கிறார். அடுத்த இரண்டு அடிகள், இந்த உடலோடு அடிகளார். உலகிடை உலவி வருகின்ற நேரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், அவரது வேண்டுதலையும் தெரிவிக்கின்றன. ஊரிடை அவர் உலவிவரும்போது, அவரைக் கண்ட மக்கள் தம்முள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை, 'மருளார் மனத்து ஒர் உன்மத்தன் வருமால்' என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பேசிக் கொள்பவர்கள், இவரை உன்மத்தன் என்று கருதியதால், அவர் பக்கத்தில் வருவதற்கும், அஞ்சி(வெருண்டு) ஒடுகிறார்கள். இதனைக் கண்ட அடிகளார், உடையவனே! நான் மெய்யன்பைப் பெற வேண்டுமே என்று சொல்லிக் கொள்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது இவரை உன்மத்தன் என்று நினைத்து மக்கள் வெருளுதற்கும் தமக்கு மெய்யன்பு வேண்டும் என்று கேட்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லைபோல் தோன்றுகிறது. ஆழ்ந்து நோக்கினால் இதன் உண்மை விளங்கும். உலகியலில், மனமருட்சியுடைய பயித்தியங்களைக் கண்டு உலகோர் அஞ்சுவர். பயித்தியங்களைப்போலே நடந்துகொண்டாலும் மெய்ஞ்ஞானிகளையும், மெய்யன்பு உடையாரையும் கண்டு யாரும் அஞ்சுவதில்லை. இவர்பால் மெய்யன்பு நிறைந்திருப்பின் யாரும் இவரைக் கண்டு மருண்டு வெருளும் நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், இப்பொழுது நடைபெற்றது என்ன? கண்டவர் வெருண்டு ஒடினார்கள். எனவே, தர்க்கரீரியாகத் தம்மிடம் மெய்யன்பு இல்லையென்ற முடிவிற்கு வந்த அடிகளார்,