பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 உடையவனைப் பார்த்து, மெய்யன்பைப் பெறவேண்டி இறைஞ்சுகின்றார். "யானே பொய் என் நெஞ்சும் பொய்’ (திருவாச. 4, “யானும் பொய்யும் புறமே போந்தோமே (திருவாச 89) 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ (திருவாசம்:218) என்றெல்லாம் L!ᏮlᎩ பாடல்களில் பாடிவந்துள்ளார். ஆதலின், இப்பொழுதும் தம்பாலுள்ள பொய்யன்பை நீக்கி, மெய்யன்பு விளையுமாறு அவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறார். 488. வேண்டும் வேண்டும் மெய் அடியார் உள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே துண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்கொல் வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே 4 இப்பாடலுக்குப் பொருள் செய்வது சற்றுக் கடினமாக இருத்தலின் பின்வருமாறு கொண்டுகூட்டுச் செய்தல் நலம். ‘அடியேன் இடர் களைந்த அமுதே! அரு மா மணி முத்தே தூண்டா விளக்கின் சுடர் அனையாய்! வேண்டும் மெய்யடியாருள்ளே இருக்குமாறு) 猛了蕊厂 விரும்பி அருளால் ஆண்டாய், வேண்டாத ஒன்றும் வேண்டாது மிக்க அன்பு மேவுதலே வேண்டும், இத்தகைய ஒரு நிலை) தொண்டனேற்கும் உண்டாம்கொல்?’ என்றவாறு. 'எனை விரும்பி அருளால் ஆண்டாய்' என்பது ஐயனே! நீயே விரும்பித், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்து வழியோடு சென்ற என்னை ஆண்டாய் என்ற பொருளைத் தரும். வேண்டும் மெய்யடியார்