பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 171 அடிகளார் வேண்டாத ஒன்றும் வேண்டாது' என்று கூறியதும் இக்கருத்துப் பற்றியேயாம். - 489. மேவும் உன் தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா உன்தன் கருணையினால் பாவியேற்கும் உண்டாமோ பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்து ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே - 5 'காவி சேரும் கண்ணாள் பங்கா திருப்பெருந்துறையில் நிறைந்திருந்த உன் அடியார்களின் இடையே சென்று, அவர்களிடம் காணப்பெற்ற Այյ Ան ஆனந்தமாகிய பழங்கடலினிடத்து அமிழ்ந்து, எனது உயிர், உடம்பு, யான், எனது என்ற அகங்கார மமகாரங்கள் முழுவதுமாக அறுந்துபோகும் நிலை பாவியேனாகிய எனக்கும் உண்டாமோ?’ என்றவாறு. எளிதில் போக்க முடியாமல் மனிதர்களுக்கு அமைந்திருக்கும் நான்கு பொருள்கள் இப்பாடலின் நான்காம் அடியில் பேசப்பெற்றுள்ளன. அவையாவன, ஆவி, யாக்கை, யான், எனது என்பவையாகும். அடியார்கள் மூழ்கியுள்ள பரமானந்தப் பழங்கடலில் அமிழ்ந்து இவற்றைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்று அடிகளார் கேட்பது சிந்திக்கத்தக்கது. இந்த எண்ணம் எவ்வாறு அவருக்கு வந்தது? திருப்பெருந்துறையில் சில விநாடிகள் அவருக்குக் கிடைத்த அனுபவத்தின் விளைவாக எழுந்த வேட்கை யாகும் இது. முன்பு குருநாதர் அடியார்களிடையே அமர்ந்திருந்த அந்த நேரத்தில் திருவாதவூரர் என்ற மனிதர்