பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தம் உடலை மறந்து, உயிரை மறந்து, யான் எனது என்று எண்ணமே இல்லாமல் இருந்தாரல்லவா? இப்பொழுது அந்த நிலை சற்று மாறிவிட்டது. குருநாதரை மீட்டும் காணவேண்டும், என்பது ஆவியின் விருப்பமாகும் அடியார்களிடையே மீட்டும் அமரவேண்டும் என்பது ஆக்கையின் விருப்பமாகும். தெருவூடு நடந்து செல்கையில் இவரைக் கண்டவர்கள் பித்தன் என்று பேச, அது காதில் விழுந்து, ஏன் அவ்வாறு பேசுகிறார்கள் என்ற சிந்தனை தோன்றிற்றல்லவா? இது தோன்றக் காரணம் நான், எனது என்ற இரண்டும் மடியாமல் இருந்தமையேயாம். நான் எனது என்ற இரண்டும் மடிந்துபோகாமல் இப்பொழுது பணிசெய்கின்றன. ஆதலால் பழமையை நினைந்து பார்க்கிறார் அடிகளார். - இவை நான்கும் எப்பொழுது, எங்கே செயலற்று இருந்தன? அப்பொழுதிருந்த சூழ்நிலை என்ன என்ற சிந்தனையில் ஈடுபட்ட அடிகளாருக்கு, விடை கிடைத்துவிடுகிறது. இந்த நான்கும் செயலற்று இருந்த இடம் பெருந்துறை, செயலற்ற சூழ்நிலை அடியார்கள் நடுவே இருந்த நிலை ஆகும். - பின்நோக்கில் இதனைக் கண்டுகொண்ட அடிகளார், மறுபடியும் இந்த நான்கையும் இழக்கவேண்டுமானால், அடியார்கள் மூழ்கி இருக்கும் பரமானந்தப் பெருங்கடலுள் தாமும் அமிழ வேண்டும் என்று நினைக்கின்றார். * குருநாதர் தரிசனத்தின் தொடக்கத்தில் 'நான்’ இருந்தது உண்மைதான். அமைச்சராகிய தாம் வழியில் ஒரு பெரியவரைக் கண்டு வணங்கவேண்டும் என்று நினைத்து அவர் அருகில் சென்று வணங்குகின்ற விநாடிவரை நான்' இருந்தது உண்மைதான். குருநாதரை இவர் கண்டது இந்தப் பரு உடலில் பொருந்திய கண்களால்தான். -