பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 177 வெளிப்படுத்த வேண்டிய தேவையோ உடைமைக்கு என்றுமே இல்லை. இவற்றை அறிந்து போக்க வேண்டிய கடமை உடையவனுடையதாகும். இந்த எண்ணத்தின் விளைவாக இதுவரை தமக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர் கூறியதே இல்லை. ஆனால், என்ன காரணத்தாலோ உடையவன் இதுவரை வாய் மூடி இருந்துவிட்டான். எனவே, மனம் நொந்து போன அடிகளார் ‘என் குறையைப் போக்கவேண்டு மென்று உன்னிடம் விண்ணப்பம் செய்யாமல் (உணர்த்தாது) காலத்தைக் கழித்துவிட்டேன். எனது அஞ்ஞானமாகிய இருளை உனது அருளொளியாகிய வாள்கொண்டு துணித்துப் போக்குவாயாக’ என்கிறார். "விண்ணப்பம் செய்யாமல் இருந்தமையால்தான் (உணர்த்தாது ஒழிந்ததால்) நின்னோடு சேரமுடியாமல் கழிந்தொழிந்தேன். இதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்துப் பாரத்ததில் என் உயிரோடு ஒட்டிய அறியாமை அல்லது அஞ்ஞானம் என்னை விட்டு நீங்காமல் இருந்தமையே என்பதைத் தெரிந்துகொண்டேன். இப்பொழுது உன்மாட்டுள்ள அருளொளி என்ற வாளால் என் அறியாமை அல்லது அஞ்ஞானத்தைத் துணித்துவிட்டு என்னை ஆட்கொள்வாயாக’ என்கிறார். 'உடைமையின் தேவை அறிந்து பூர்த்தி செய்வது உடையவனின் கடமை என்று நினைந்திருந்த அடிகளார், இப்பொழுது திடீரென்று 'உடையாய்! உன்னிடம் என்னுடைய தேவை என்ன என்பதை உணர்த்தியிருக்க வேண்டும் அதைச் செய்யாமல் Liół) காலத்தை வீணடித்துவிட்டேன்’ என்ற கருத்தைப் பேசுவதே இந்தப் பாடலில் காணப்பெறும் புதுமையாகும்.