பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'அருள் அளிய' என்பது கருணை மிக்குப் பொங்க என்ற பொருளைத் தரும். ‘தணியாது ஒல்லை வந்தருளி' என்பது மெள்ள மெள்ள வாராமல், விரைவாக எழுந்தருளி உன் திருவடிகளைத் தருவாயாக என்பதாம். அடியார்களிடத்தும் இறைவனிடத்தும் அன்பு செய்யும் உள்ளத்தைத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்ட அடிகளார், அது நிறைவேறிய பிறகு, அதன் பயனாகத் திருவடி கிட்டும் என்பதை நன்கு அறிந்துள்ளார். ஆதலின், முதலில் அன்பு செய்யும் உள்ளத்தைத் தந்தருள்க என்று வேண்டிக்கொண்டு, உடனேயே திருவடியையும் விரைவாகத் தந்தருள்க என்கிறார். 493. தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ சீர் ஆர் அருளால் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேர் ஆனந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே 9 தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் ஆரா நின்றார்’ என்ற தொடரில் இறைவன் தருதலுக்கும் ஏனையோர் தருதலுக்கும் உள்ள வேற்றுமையைக் குறிப்பாக உணர்த்துகின்றார். மக்கள் ஒன்றைத் தருகிறார்கள் என்றால் தம்மிடத்தில் உள்ளதில் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு ஒருபகுதியைத் தருகிறார்கள் என்ற பொருளையே தரும். பாரி போன்ற வள்ளல்கள் இவ்விதிக்குப் புறம்பாவர். அவர்கள் தமக்கென்று எதனையும் வைத்துக்கொள்ளாமல் தம்மையே