பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 183 என்னை வரவழைத்து என் சிந்தனையைத் திருத்தி ஆண்டாய். அப்படியிருக்க, என் சிந்தனை உள்ளே இருந்த ஆனந்தத்தைத் தொலைத்துவிட்டு அலமருகின்றது. இப்பொழுது நீதான் அதற்கொரு வழிசெய்ய வேண்டும். 'திருப்பெருந்துறையில் நீ பெய்த ஆனந்தம் என் சிந்தனையை விட்டு மறுபடியும் ஒடிவிடாமல் பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும்’ என்று பாடுகின்றார். 494, மான் ஒர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனம் நெகா நான் ஓர் தோளாச் சுரை ஒத்தால் நம்பி இனித்தான் வாழ்ந்தாயே ஊனே புகுந்த உனை உணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தைக் கோனே அருளும் காலந்தான் கொடியேற்கு என்றோ கூடுவதே 10 'உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே! உன்னை வந்திப்பார்க்குக் கனி போன்றவனே! வந்திப்பவரிடையே இருந்து உன்னைச் சில நேரம் கண்டு, உன் அருளைப் பெறும் வாய்ப்புப் பெற்றிருந்தும் இப்பொழுது என் நிலை என்னாயிற்றுப் பார்த்தாயா? நீ, எதிரே இருக்கும்பொழுது உருகி ஓடிய என் உள்ளம் இப்பொழுது உருகுவதே இல்லை. அதுமட்டுமா? துளையிடாத சுரைக் குடுக்கைபோல் வாழ்கின்றேன். ஐயனே! இந்த ஊன் நிறைந்த உடம்பினுள் நீ புகுந்தததை அன்று உணர்ந்தேன்; இன்று மறந்துவிட்டேன். இந்த நிலை மாறி, நீ புகுந்ததை மறுபடியும் உணர்ந்து, உள்ளம் உருகி நிற்கும் காலம் எப்பொழுது வரப்போகிறது? அது விரைவில் வர அருள் செய்வாயாக'என்றவாறு. -