பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இரண்டறக் கலத்தல் என்பதை ஏற்றுக்கொண்டால் ஊடுதல் கூடுதல் என்ற இரண்டும் அங்கு இருப்பதற்கில்லை. ஊடுதல் கூடுதலாகிய செயல்கள் நடைபெறவேண்டு மானால் இருவர் அங்கு இருந்தே தீரல் வேண்டும். ஒன்றாகி ஐக்கியப்படும் நிலையே பேரின்பம் என்றால் ஊடவோ, கூடவோ அங்கு இருவர் ஏது? 3. என்றாலும் அடியார்களாக உள்ளவர்கள், இந்தப் பரு உடம்புடன் இந்த உலகில் வாழும் காலத்து இறைவனோடு எவ்வளவு உறவு கொண்டாலும் தம்மைத் தனியே நினைந்து பேசுதல் மரபு. அந்த முறையில் அவன் தலைவன் ஆவான்; எல்லா உயிர்களும் தலைவி ஸ்தானத்தில் உள்ளவை ஆகும் என்ற கருத்தில் சிற்றின்பத்தையும், பேரின்பத்தையும் இணைத்துப் பேசுதல் மரபு. இவை இரண்டிற்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. சிற்றின்பத்தின் உயிர்நாடி தன்னை இழப்பதாகும். அதேபோல, பேரின்பத்திலும் இது முதற்படியாகும். எனவேதான் நம் முன்னோர் இவற்றை இணைத்துப் பேசினர். @ 3 &