பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 குழைத்தலாகிய செயலைச் செய்த பத்துப் பாடல்கள் என்று பொருள்கொண்டால், குழைத்தலாகிய செயலுக்கு அடிகளார் கர்த்தா ஆகிவிடுவார். தம்மாட்டுக் குழைந்து குற்றங் களைந்து ஆட்கொள்ள வேண்டும் என்று பாடுவது வேறு; அதன் எதிராக, இப்பாடல்கள் இறைவன் திருவுள்ளத்தைக் குழைத்துவிட்டன என்று கூறினால் குழைக்கும் செயலைச் செய்யும் கர்த்தா, இறைவன் திருவுள்ளத்தைவிட ஒருபடி மேலே நிற்கின்றார் என்ற தொனிப்பொருள் வந்துவிடும். : இப்படி ஒரு கருத்தை அடிகளார் நினைந்திருப்பாரா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். எனவே இறைவனைக் குழைத்த பத்து என்று பொருள் கூறுவது அவ்வளவு பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. குழைத்த பத்து என்ற பெயர் வந்தததற்கு மேலே கூறப்பெற்ற இரண்டு விளக்கங்களும் திருப்தியளிக்க வில்லை. தம்முடைய உள்ளத்தைத் தாமே முயன்று குழைத்ததுபற்றி முதல் பாடலில் கூறுகிறார். ஆதலின் ஒரு வேளை இந்தப் பெயர் வந்திருக்கலாம். "ஆத்தும நிவேதனம்’ என்று இடப்பட்ட உட்தலைப்பும் வழக்கம்போல் பொருந்துமாறில்லை. நிவேதனம் என்று கூறினால் நிவேதனம் செய்பவன் ஒருவன், நிவேதனம் செய்யப்படும் பொருள் ஒன்று, நிவேதனத்தை ஏற்றுக்கொள்பவன் ஒருவன் என்ற மூன்றும் இருந்துதீரல் வேண்டும். நிவேதனத்தை ஏற்றுக்கொள்பவன் ஒருவன் உண்டு என்ற பொருளை இங்கும் ஏற்றுக்கொள்ளலாம். அப்படியானால் நிவேதனம் செய்பவர் யார்: அடிகளார். என்று வைத்துக்கொண்டால், எதை நிவேதனம் செய்கிறார். என்ற வினாவிற்கு ஆத்மாவை என்று விடை கிடைக்கும். அப்படியானால் ஆத்மாவை வேறு பிரித்துவிட்டால், அடிகளார் என்ற ஒருவர் மிஞ்ச வாய்ப்பே இல்லை.