பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 191 எனவே, 'ஆத்ம நிவேதனம்’ என்ற உட்தலைப்பின் பொருத்தமின்மை நன்கு தெளியப்படும். 496. குழைத்தால் பண்டைக் கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன் உழைத்தால் உறுதி உண்டோதான் உமையாள் கனவா எனை ஆள்வாய் பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று அழைத்தால் அருளது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே l 'உருகாத கல்போன்று இருந்த என் உள்ளத்தை உன்பால் கொண்ட அன்பு காரணமாகக் குழைத்தேன் ஆதலின் பிறவிதோறும் தொடர்ந்துவரும் என் பண்டைக் கொடுவினையின் பிடியிலிருந்து என்னைக் காக்க வருவாயாக. 'கொடுவினை செய்தவனாகிய நான், உள்ளத்தைக் குழைக்கும் செயலை விடாது செய்வேனாயின் (உழைத்தால்) ஈடேறலாம் என்ற உறுதி நிச்சயமாக உண்டு’ என்றவாறு. 'எனை ஆள்வாய்' என்று வேண்டிக்கொள்வதற்கு முன்னர், 'உமையாள் கணவா!' என்று விளிப்பது கருத்துடை விளியாகும். அடிகளாரை ஆட்கொள்வதற்குச் சரியான நேரம் வரவில்லை என்றோ, சரியான தகுதி அவர்பால் வரவில்லை என்றோ கருதி, அப்பெருமான், காலம் தாழ்த்துவானாயின் அவன் பங்கில் உறைபவளாகிய அன்னை காலம் தாழ்த்த விடமாட்டாள் என்ற கருத்தைக் கொண்டுள்ளது இந்த விளி. - 'குற்றம் செய்வது எனது இயல்பு; அதனைப் பொறுத்துக்கொள்வது உனது கடமையன்றோ என்ற