பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பெற்றதும் உடலில் அற்புதமான அமுத தாரைக ஏற்றப்பெற்றதும் உடன்பாட்டு நிலை. - மாபெரும் அறிவாளியும், கல்வி ஞானம் உடையவரு ஆகிய அடிகளார், தம்முடைய உள்ளமும் உடலு அல்லலைத் துறந்ததையும் உணர்ந்தார்; பதிலா இறையனுபவம், ஆனந்தம் என்பவற்றை உள்ள பெற்றதையும் உடல் அமுத தாரைகள் பெற்றதையு நன்றாக, ஆழமாக உணர்ந்திருந்தார். ஆதலின், இவற்றை கற்பனை யென்று ஒதுக்கமுடியாது. இவை ந.ை பெற்றிருந்ததால் தம் அல்லல் அறுதியாக நீங்கிவிட்ட என்று நம்பியதில் எவ்விதத் தவறுமில்லை. ஆனால், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு புதிய அதிர்ச் அடிகளாருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். உள்ளத்திலு. உடலிலும் ஒரளவு அல்லல் தோன்றியிருக்க வேண்டு. மாபெரும் அறிவாளியாகிய அடிகளார், இந்த நி.ை வருவதற்குக் காரணமென்ன என்ற ஆராய்ச்சியி: ஈடுபடுகின்றார். ஆண்டது உண்மை; ஆண்டதால் அல்லல் போனது உண்மை. அப்படியானால் இந்த அல்லல் மீள வருவதற்கு எது காரணம்? இந்த உடல் இருக்கின்றவரையில் இந் உடலுக்குரிய குற்றங்கள் இருந்தே தீரும். இந்தக் குற்றங்க இருக்கின்றவரையில் முன்னர்க் கிடைத்த இறையனுபவ. ஆனந்தம் என்பவை நிலைபெறா. திருவடி சம்பந்த பெற்றபோது, அமுத தாரைகள் ஏறின; அத்திருவடி சம்பந்தம் நீங்கியபோது அமுத தாரைகள் கொஞ்ச கொஞ்சமாகக் குறையத் தொடங்கி, உடல் பழைய நிலைக்கு வந்துவிட்டது. அனைத்தையும் இழந்து இப்பொழுதுள்ள நில்ைக்கு வருவதற்கு எது காரணம் என் ஆராய்ச்சியில் தொடங்கி, தருக்க ரீதியாக ஒரு முடிவுக்கு வருகின்றார் அடிகளார். ;