பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 209 இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு நன்மை, தீமையென்று எதை வேண்டினாலும் அவற்றை முழுவதுமாகத் தருகிறாள் என்ற கருத்தை வெளிப்படுத்த வேண்ட முழுதும் தருவோய் நீ என்கிறார். அடுத்துள்ளது வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ, வேண்டி, என்னைப் பணிகொண்டாய்” என்பதாகும். இங்குச் சொல்லப்பெற்ற கதை மிகப் பழைய கதையாயினும் அதனை எடுத்துக்கூறித் தம் அனுபவத்தையும் உடன் சேர்த்ததன் மூலம் அவனுடைய கருணைக்கு எல்லையே இல்லை என்பதைத் தெரிவிக்கின்றார். - வேண்டுதல் வேண்டாமை இலானாகிய ஒருவனை அடைய, அகப்பற்று புறப்பற்றுக்களை நீக்கிச் சரணம் என்று தம்மையே அவர்கள் தந்திருப்பார்களேயாயின் அவர்களுக்கு அரியனாக அவன் இருந்திருக்க மாட்டான். இந்த நுண்ணிய கருத்தை அறிவுறுத்தவே, அயன், மால்' என்ற தொடருக்கு முன்னர் வேண்டும்’ என்ற சொல்லைப் பெய்கின்றார். வேண்டும்’ என்ற அடை இருவருக்கும் பொதுவாய் நின்றது. சரண்புகுந்து திருவடிக் காட்சி தரவேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்குப் பதிலாக, அடியையும் முடியையும் காணவேண்டும் என்ற தற்போதத்துடன் புறப்பட்டனர் இருவரும் அறிவு (அயன்), செல்வம் (மால்) என்ற இரண்டிற்கும் இயல்பாக நிற்பது தன்முனைப்பு. தன்முனைப்பின் இலக்கணமே எல்லாவற்றையும் தனக்கு வேண்டும் என்று நினைப்ப தாகும். எனவே, அவர்கள் இருவருக்கும் அவன் அரியனாகினான். - திருவாதவூரராக இருந்தபொழுதுகூட அமைச்சர் பதவி முதல் எதனையும் வேண்டும் என்று அவர் நாடிச் செல்லவில்லை. தற்போதம் குறைந்திருந்தமையின் எந்த ஒன்றையும் வேண்டும், வேண்டாம் என்று நினைக்கும்