பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 215 இந்த நுணுக்கம்தான் மேலைப் பாடலில் பேசப்பெற்றுள்ளது. "குன்றே அனையாய்! எந்தன் ஆவியும் உடலும் 2 of 632.É) எல்லாம் ஆட்கொண்டபோதே கொண்டிலையோ? இடையூறு எனக்கு உண்டோ? நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகம்? என்ற முறையில் பாடல் அமைந்துள்ளது. 503, நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டுஇருக்கும் அதுஅன்றி ஆயக் கடவேன் நானேதான் என்னதோ இங்கு அதிகாரம் காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண் நுதலே 8 இதுவரையில் தம்முடைய முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பது இந்த உடம்பு என்ற நினைவில் பல பாடல்கள் பாடியுள்ளார். இந்த உடம்பை விட்டால் அடியார்களோடு சேர்ந்து அவர் திருவடியின் எதிரே அமர்ந்திருக்கலாம் என்ற காரணத்தால் உடம்பை விட்டுவிட வேண்டும் என விரும்பினார். ஆனால், இந்த உடம்பு குருநாதர் உடைமை ஆதலால் அதைப் போக்கிக் கொள்ளும் அதிகாரம் தமக்கில்லை என்று உணர்ந்ததால் 'செத்திடப் பணியாய் (திருவாச:400) என்றெல்லாம் பாடினார். ஆனால், இப்பொழுது அடிகளார் மனத்தில் புதிய சிந்தனை ஒன்று புகுந்துவிட்டது. உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் எடுத்துக்கொண்ட குருநாதர், தம்முடைய சொத்தாகிய இந்த உடம்பை இங்கு விட்டுவைத்துள்ளார். எனவே, அது செத்திடவேண்டும் என்று கேட்பதற்குக்கூடத் தமக்கு உரிமையில்லை என்பதை