பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 உணர்ந்துவிட்ட அடிகளார். 'நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவியும் உன் வசமே சொத்தே| என்று பேசுகிறார். மேலும், குருநாதருடைய சொத்தை வைத்திருக்கும் கடப்பாடுடைய எனக்கு, இந்த உடம்பை மேலும் வைத்திருக்க அவர் ஆணையிட்டாலும் சரி, அன்றி இந்த உடம்பை ஒழித்து அவர் திருவடிகளில் சேர்த்துக் கொண்டாலும் சரி, காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய்) அதனை முடிவு செய்ய நான் யார்? (ஆயக்கடவேன் நானோதான்) இந்த முடிவை எடுக்க எனக்கு என்ன அதிகாரம் உள்ளது? (என்னதோ இங்கு அதிகாரம்?) என்கிறார். 504. கண் ஆர் நுதலோய் கழல் இணைகள் கண்டேன் கண்கள் களி கூர எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும் அது அல்லால் மண்மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே 9 மேலே இரண்டு பாடல்களிலும் கூறப்பட்ட கருத்தே மீண்டும் இங்கு பேசப்பெறுகிறது. 'கழலிணைகள் கண்கள் கணிகூரக் கண்டேன். வேறு சிந்தனை இல்லாமல் இரவும் பகலும் அத்திருவடிகளையே நினைந்துகொண்டிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு, மண் உலகில் இந்த உடம்பை விட்டுவிட வேண்டும் என்றும், விண்ணில் உன் திருவடிகளில் வந்து இணைந்து விடவேண்டும் என்றும் எண்ணுவது சரியா? நீ எடுக்க வேண்டிய முடிவை, உன் அடிமையாகிய யான்