பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 221 'எந்நாள் களித்து எந்நாள் இறுமாக்கேன்’ என்ற தொடரில் எந்நாள் என்ற சொல்லை இருமுறை பயன்படுத்தியது, எதிர்பார்த்து நிற்கும் அவலத்தின் ஆழத்தை உணர்த்தவேயாம். பிற்காலக் கவிஞராகிய மகாகவி பாரதியார் ‘என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் என்று எமது அன்னை கைவிலங்குகள் போகும்’ பாரதி பாடல்கள் தமிழ்ப்பல்கலை, பா 216) என்ற வரிகளில் நான்கு முறை என்று’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் திருவாசகத்தைப்போல எதிர்பார்த்து ஏங்கிநிற்கும் அவல நிலையைக் குறிப்பதற்காகவே பெய்யப் பெற்றது என்க. 507. நான் ஆர் அடி அண்ைவான் ஒரு நாய்க்குத் தவிசு இட்டு இங்கு ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப் பெருந்துறை உறைவான வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன் எனக்கே 2 திருப்பெருந்துறையில் தமக்கு நிகழ்ந்த அற்புதத்தை விரிவாக எண்ணிப்பார்க்கிறார் அடிகளார். அந்த அற்புதத்தை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவரையும் அறியாமல் ஒரு வியப்பு மேலிடுகிறது. எதிரே தெரிந்த குருநாதரை நெருங்கிச் சென்று அவர் திருவடிகளில் விழவேண்டும் என்ற எண்ணம் எப்படித்