பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தோன்றிற்று? என்னை நான் நன்கு அறிவேன் ஆதலின், நானாக அந்தச் செயலைச் செய்யவில்லை என்ற உண்மை விளங்கித் தோன்றுகிறது. அவன் திருவடிகளை அணைய எனக்கு என்ன உரிமையும் தகுதியும் இருந்தன? என்போக்கில் விட்டிருந்தால் குதிரைகளை வாங்க, தொண்டிக்குச் சென்றிருப்பேனே அல்லாமல், திருவடியை அடையவேண்டு மென்று நினைத்திருக்கவே மாட்டேன். அப்படியிருந்தும் அந்தக் குருநாதர் வழியோடு போன என்னை இழுத்துப் பிடித்தல்லவா ஆட்கொண்டார்? எனக்கே என்னை ஓரளவு தெரியும்போது என் குருநாதர் என்னைப்பற்றி அறியாமலா இருந்திருப்பார்: ஒரு சிறு தகுதியும் என்பாலில்லை என்பதை அறிந்திருந்தும் அவர் என்னை ஆட்கொண்டார் என்றால், அதனை என்னவென்று சொல்வது? ஒரு மாபெரும் ஞானியை அமரச் செய்யவேண்டிய பீடத்தில் நாயை அமரச் செய்தது போன்ற செயலை அல்லவா குருநாதர் செய்துவிட்டார்! அத்தோடு விட்டாரா? ஊனால் ஆகிய இவ்வுடம்பினுள்ளும் அல்லவா புகுந்துவிட்டார்! அத்தோடாவது நின்றாரா? உயிரோடல்லவா கலந்து விட்டார்! அப்படிக் கலந்தவர் சில நாட்கழித்துப் பிரிந்து போயிருப்பார் என்றுதானே பலரும் நினைப்பார்கள்? இல்லை! என் உள்ளத்தில் புகுந்து பிரியாமல் நிரந்தரமாகவே தங்கிவிட்டார். 'இவ்வாறெல்லாம் செய்தவர் யாரென்று தெரியுமா? குருநாதர் வடிவில் இருந்தாரே தவிர, இவற்றையெல்லாம் செய்தவர், தேனார் சடை முடியார், திருப்பெருந்துறையில் உறைபவரே ஆவார். . 'பெரும் புண்ணியம் செய்தவர்களே தேவருலகில் இடம்பெறுவர் என்று சொல்லுவர். ஆனால், அந்தத் தேவர்கள் தேவருலகின் இன்பங்களைத்