பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஆண்டார். இவ்வளவு பெரிய பரம்பொருள், கேவலம் என்போன்ற மனிதருள்ளே புகுவது நடைபெறுமா? ஒருவேளை, கனவில் நடைபெற்றிருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றீர்கள் அல்லவா? ஆனாலும் என்ன வியப்பு! இது நடந்தேவிட்டது, எப்படிப் புகுந்து ஆண்டார் தெரியுமா? பட்டப் பகலில் (எல்லே) என்னுள் புகுந்தார், புகுந்தது எப்படித் தெரியும் என்கிறீர்களா? உள்ளே நடைபெற்ற செயலால் அதனைப் புரிந்துகொண்டேன். "புகுந்து, அடுத்தபடியாக (பினை:பின்னை) எனது எற்புத் துளைதொறும் இன்ப ஊற்றுப் பெருகுமாறு செய்தார். அதன் பயனாக என் எலும்புகள் உருகின. “இத்துணைச் செயல்களையும் ஒரே விநாடியில் செய்து, என் வினையைப் பொசுக்கக் கூடிய வினைக்கேடன் அவரைப்போன்ற ஒருவரை எங்கேனும் கண்டதுண்டோ? சொல்லுங்கள்! 'நடந்ததை யெல்லாம் நினைத்துப்பார்த்தால், என் வினையைப் பொசுக்கியவர், பட்டப் பகலில் என்னுள் புகுந்தவர். என் எலும்பை உருக்கியவர், முழுவதுமாக என்னை ஆட்கொண்டவர் யாரென்று தெரிகிறதல்லவா? அவர்தான் திருப்பெருந்துறை உறை பெம்மான். 'பட்டப் பகலில் என்னுள் புகுந்து என் வினையைப் போக்கியவர், முழுவதுமாக என்னுள் நிறைந்துள்ளார். ஆதலின், என்னுடைய மனத்திலும் (மனத்தான்), என் கண்ணின் கருவிழியிலும் (கண்ணின் அகத்தான்), யான் பேசும் சொல்லிலும் (மறுமாற்றத்திடையான்) அவரே நிறைந்துள்ளார் என்பதை அறிக' என்றவாறு. 'மறுமாற்றம்’ என்ற சொல் ஆழமான பொருளைக் கொண்டது. “மாற்றம்’ என்பது சொல் என்ற பொருளையுடையது. ஒருவர் தம் மனத்திடை ஒன்றை நினைந்து, அந்த நினைவிற்கு ஒரு சொல்வடிவு கொடுத்துப்