பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 16 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கொண்டதே கோலம் என்று திரிபவர்கள் ஒருபுறம், ஏகாக்ர சிந்தையராய்த் தவம் முயல்வோர் ஒருபுறம், அறிவு கல்வி இவற்றின் துணைகொண்டே இறை இலக்கணத்தை அறிந்துகொள்ள முற்படுவோர் ஒருபுறம்: அன்பு பிழம்பாய்த் திரியும் அடியார்கள் ஒருபுறம் ஆகக் காட்சியளிப்பதே ஞாலத்தின் கோலம். ஒன்றுக்கொன்று மாறுபட்ட இயல்புடைய இவர்கள் அனைவரும் ஞாலம்’ என்ற சொல்லில் அடங்குவர். 'வானோர்’ என்ற சொல்லினால் குறிக்கப்படுபவர்களும் இதேபோன்ற பல்வேறு நிலையில் உள்ளவர்கள், மிக உயர்ந்த பதவி கிடைத்ததும் இன்ப வேட்டையிலேயே பொழுதைக் கழிப்பவன் இந்திரன். தேவர் உலகத்திலும் இத்தனை வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. அடுத்து உள்ளவர்கள் நான்முகனும் திருமாலும், - இத்தனை பேருக்கும் ஒரு பொதுக்கடமை உள்ளது. திருவடியைக் காணமுயல்வதுதான் அக்கடமை. அதிலும் இருவகை உண்டு. திருவடி என்ற சிந்தனையே இல்லாமல் உள்ளவர்கள் ஒருபுறம், திருவடியைக் காணவேண்டுமென்று ஒலமிடும் திருமால் ஒருபுறம். கவலையேபடாதவர்கள் ஒருபுறம், ஓலமிடுபவர்கள் ஒருபுறம் என்றாலும் யாரும் திருவடியைக் கண்டதில்லை. இத்தனை பேர் ஓலமிட்டு அலறியும் காணமுடியாத அத்திருவடி, தானாகவே யாரோ ஒருவரைத் தேடிச் சென்றது என்கிறார் அடிகளார். எப்படித் தேடிச்சென்றது? 'எனை நயந்து இனிது ஆண்டாய் என்று கூறுவதன் மூலம், இவரை விரும்பி ஆண்டது. இன்பத்தைத் தந்து இனிது ஆண்டது என்கிறார். - . அப்படி எளிதாகக் கிடைத்துவிட்ட காரணத்தால் அதனை இறுகப் பற்றிக்கொள்ளாமல், அதன் அருமை