பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. அச்சப் பத்து (ஆனந்தமுறுதல்) இதற்கு முன்னர் உள்ள ஐந்நூற்றுப் பதினைந்து பாடல் களிலும் காணப்பெறாத சில கருத்துக்கள் அச்சப்பத்து என்ற இப்பகுதியில் அமைந்துள்ளதைக் காணலாம். மூவருள் மூத்தவராகிய நாவரசர் பெருமான் பல்வேறு துன்பங்களை ஏற்று அனுபவித்தவர். அப்படியிருந்தும் 'அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதும் இல்லை’ (திருமுறை:4-2) என்று பாடியுள்ளார். காழிப் பிள்ளையாரும் திருவாரூர்ப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'அஞ்சல் நெஞ்சே' (திருமுறை:2-79) என்றுதான் பாடியுள்ளார். மூவர் முதலிகள் தேவாரம் முழுவதிலும் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சியதாகப் பாடலே இல்லை. அடிகளார் பத்துப் பாடல்களிலும் உலகிடை அச்சம் தரும் பொருள்கள் அனைத்தையும் ஒரு வரிசைப்படுத்தி, அவற்றுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று பாடிச் செல் கிறார். ஆனால், ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் மிகச் சாதாரணமாக உலகிடைக் காணப்பெறும் ஒரு காட்சியை, யாருக்கும் எவ்விதத்திலும் அச்சத்தைத் தூண்டாத ஒரு காட்சியை எடுத்துக்கூறி, அதனைக் கண்டு அஞ்சுகிறேன் என்று அவர் பாடியுள்ளது வியப்பைத் தருகிறது. 'பெம்மாற்கு (சிவபெருமானுக்கு அற்றிலாதவரைக் கண்டால் (திருவாச.51) அஞ்சுகிறேன் என்றும், மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவராதவரைக் கண்டால்'