பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 (திருவாச 517) அஞ்சுகிறேன் என்றும், வெண்ணிறு அணிகிலாதவரைக் கண்டால் (திருவாச. 520 அஞ்சுகிறேன் என்றும், திருமுண்டம் திட்டமாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால்' (திருவாச. 524) அஞ்சுகிறேன் என்றும் அடிகளார் பாடியதன் நோக்கம் என்ன? இப்பெருமக்களுடைய பாடல்களைக் ஆராயும்போது அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலையையும், வரலாற்று அடிப்படையையும் மனத்துட் கொண்டு ஆய்தல் பயனுடையதாகும். இப்பதிகத்தின் முதலிரு பாடல்களிலும் சிவபெருமானைத் தவிரப் பிற தெய்வங்களை வணங்கு கின்றவர்கள் பேசப்பெறுகின்றனர். சங்ககாலம் தொட்டே சைவம், வைணவம், பெளத்தம் சமணம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டில் பரவிநின்றன. ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் சமணம், பெளத்தம் ஆகிய இரண்டையும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் சாடினர். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெளத்த, சமணச் செல்வாக்கு அழிந்துவிட்டது. எஞ்சியவை சைவம், வைணவம் ஆகிய இரண்டுமே. அடிகளார் காலத்திற்குச் சற்று முன்னர் அத்வைதம் பரப்பிய ஆதி சங்கரர் தோன்றுகிறார். ஆனாலும், அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் வடமொழியில் அமைந்திருந்தமையின் அவை தமிழ் மக்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால், ஏழாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதி, எட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதி ஆகிய காலங்களில் சைவத்திற்குச் சரியான போட்டியாக அமைந்தது வைணவம், பரம்பரையாகச் சைவத்தில் ஈடுபட்டிருந்த பாண்டியர்களுள் பூரீமாறன் பூரீவல்லவன் என்பவன் பெரியாழ்வார் செல்வாக்கினால் வைணவத்தைத் தழுவினான். அதே காலத்தில் வாழ்ந்த பெரியாழ்வாரின்