பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சப் பத்து 241 திருமகளான கோதை நாச்சியாரின் பாடல்கள் தமிழகத்தை ஒரு கலக்குக் கலக்கியது உண்மைதான். கோதை நாச்சியாருக்கு அறுபது, எழுபது ஆண்டுகள் பிற்பட்ட அடிகளார் காலத்தில் கோதை நாச்சியார் தோற்றுவித்த வைணவப் புயலைத் திசைமாற்றுவது அரும்பெரும் காரியமாக அமைந்து விட்டது. இந்த அடிப்படையில்தான் இப்பதிகத்தின் முதலிரு பாடல்களில் பிற தெய்வங்களை வணங்குவோரைக் கண்டால் நான் அஞ்சுகிறேன் என்று பாடியுள்ளார். - அடுத்து வரும் பாடல்களில், விபூதி அணியாதவர், சிவபெருமான் மேல் அன்பு செலுத்தாதவர் ஆகியோரைக் கனடால் அஞ்சுகிறேன் என்று பாடுகிறார். . ஞானசம்பந்தர் காலத்திலும், நாவரசர் காலத்திலும் சமயப் போராட்டம் தலைதூக்கிநின்றது. எனவே, நாவரசர் சாத்துவிக முறையிலும், காழிப் பிள்ளையார் சொற்போர் முறையிலும் இச்சமயப் போரில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் மோதலில் ஈடுபட்டது, புறச்சமயங்களாகிய சமண, பெளத்தங்களோடு ஆகும். அடிகளார் காலத்தில் புறச்சமயப் பிரச்சினை பின்தங்கிவிட, வைணவத்தோடு போராடும் பிரச்சினை தலை தூக்கியது. தொடக்கத்திலிருந்தே இறைப்பிரேமையில் மூழ்கியிருந்த அடிகளாருக்கு இந்தப் போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடும் வாய்ப்பு இல்லை. என்றாலும், ஒரோவழி இது அவரைத் தாக்கிற்று என்பதற்கு இப்பதிகம் ஒர் எடுத்துக்காட்டு. - அடிகளார்போன்று இறையருளை இப்பிறவியிலேயே பெற்று உயர்ந்தவர்கள், பிற சமயங்களையும் சமய வாதிகளையும் சாடுவது சரியா? என்ற வினாத் தோன்றினால் விடை கூறுவது கடினம். நாயன்மார்கள் மட்டுமல்லாமல் ஆழ்வார்களும் இவ்வாறே இருந்துள்ளனர்.