பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 சைனர்களுக்கும், பெளத்தர்களுக்கும் ஓயாத சண்டை நடைபெற்றதை வரலாற்றில் காணமுடிகிறது. வேத காலத்தில் இருக்கு வேத அடிப்படையில் யாகம் செய்பவர்களுக்கு இடையேகூட இருநூறுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருந்தன என்பதையும், அவர்கள் தம்முள் ஓயாது போரிட்டனர் என்பதையும் அறியமுடிகிறது. இருக்குவேதம் கூறும் தாஸ்ராக்கியப் போர் இவர்களிடையே நடைபெற்ற பெரும்போரை வர்ணிக்கின்றது. கிறிஸ்தவ சமயம் கத்தோலிக்கர்கள், பிராடஸ்டன்ட்ஸ் எனப்பிரிந்து பலகாலம் தம்முள் போரிட்டது. இஸ்லாத்திலும் உட்பிரிவுகளிடையே போர் நடைபெற்றதை வரலாற்றில் காண்கிறோம். எனவே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிற சமயங்களைக் குறை கூறியதில் வியப்பொன்றுமில்லை. அடிகளார் காலத்திலும் நிலைமை இவ்வாறு இருந்தது என்பதை சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர் (திருவாச: 452.53) என்று அவரே கூறுவதால் அறியமுடிகிறது. காலத்தை ஒட்டி நிகழ்ந்த இப்பிரச்சினைகளில் அருளாளர்களும் தள்ளப்பட்டனர் என்பதுதவிர இதனால் அவர்களை ஒன்றும் குறைகூற முடியாது. இந்த வரலாற்று அடிப்படையைச் சிந்தியாத முன்னோர் உள் தலைப்புத் தரும்பொழுது ஆனந்த முறுதல் என்று எழுதிப்போயினர்போலும். இப்பதிகம் முழுவதிலும் சிவானுபவத் திளைப்பு இடம்பெறவேயில்லை. பெற்றிருப்பின் 'அம்ம நாம் அஞ்சுமாறே என்று பாடும் நிலை தோன்றியே இராது. 516. புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றை வார் சடை எம் அண்ணல் கண் நுதல் பாதம் நண்ணி