பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தில்லைக் கூத்தன் ஆடும்பொழுது எரி ஏந்திய இடக்கையை வீசி நின்று ஆடுகிறான் ஆதலின் எரி கை விசி என்றார். எரி இருக்கும் இடத்தில் புகை இருக்கும் ஆதலின் புகைமுகந்த எரி என்றார் மொட்டு அவிழ்கின்ற கொன்றை {f}{T6ð) GU55) ti i அணிந்தவனும், பிரபஞ்ச காரணனும் முன்னவன்) ஆகிய அவனுடைய திருவடிகளை ஏத்தி உள்ளம் உருகாதவரைக் கண்டால் அஞ்சுகிறேன் என்கிறார். 523. தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன் வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்து இனிது இருக்க மாட்டா அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 8 நெருப்பை உமிழ்கின்ற கண்ணையுடைய புலிக்கும் அஞ்சமாட்டேன் என்கிறார். மணம்பொருந்திய சடாபாரத்தை உடையவனும், தேவர்களும் காணமாட்டாத் திருவடியை உடையவனும் ஆகிய அப்பன் திருவடிகளை ஏத்தி, அதன் பயனாக ஆனந்தத்தையும் அமைதியையும் பெற்றுச் சிறப்புடன் இனிதாக இருக்கலாம் என்ற அறிவைப் பெறாத அறிவிலிகளைக் கண்டால் அஞ்சுகிறேன் என்கிறார். 'தறிசெறி களிறும் அஞ்சேன்’ என்று பாடமும் உண்டு. அவ்வாறாயின் போர்க்காலத்தை அன்றிப் பிற நேரங்களில், தறியில் கட்டப்பட்டுள்ள யானைக்கும் அஞ்ச மாட்டேன் என்ற பொருளை, அத்தொடர் தந்துநிற்கும்.