பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வாழ்த்தும் ஆண்மை இல்லாதவரைக் கண்டு அஞ்சுகிறேன் என்கிறார். இங்கு ஆண்மை என்று கொள்ளப்பட்டது இன்று நாம் கொள்ளும் பொருளில் அன்று. ஆளுமை என்ற பொருளே இங்கு தரப்படல் வேண்டும் இறைவன் புகழை ஏத்தி வாழ்த்துதற்கு பாடலின் முற்பகுதியில் உடலும், மனமும் எந்த நிலையில் இருத்தல் வேண்டுமென்று அடிகளாரே கூறியுள்ளார். மனம் புத்தி முதலியவை இந்நிலையில் தளராமல் இருப்பதற்கு அவற்றை உடையவர் நல்ல ஆளுமையுடன் இருந்தா லொழிய இவை முன்னே சொன்னபடி பணி செய்யா. ஆகவே, இத்தகைய ஒருவரைக் குறிப்பிடும்போது ஆண் அலாதவர் அதாவது மனம் புத்தி முதலியவற்றை அடக்கி ஒருநிலைப்படுத்தும் ஆளுமை இல்லாதவர் என்று அடிகளார் கூறுகிறார்.