பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்னும்போது ஒருவர்'என்ற சொல் சுட்டுமாத்திரையாய் நிற்கின்றதே தவிர அதற்கு வேறு பொருளில்லை. 'பருவரை மங்கை தன் பங்கன்’ என்றாலே நம்முடைய மனோலயம் கடந்து கற்பனையால்மட்டும் ஒரளவு சிந்திக்கக் கூடிய நிலையில் இருப்பவன் என்பது தெளிவாகிறது. அடுத்து, ஒன்றுமில்லாத ஒருவன் என்றால், குணங்குறி கடந்து நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற ஒருவன் என்ற பொருளே வலுவடைகிறது. அப்படிப்பட்ட ஒரு பொருளை, பொறி, புலன்கள் மூலம் காணவோ அந்தக்கரணங்களுள் மனத்திலோ, சித்தத்திலோ நிறுத்தவோ முடியாது. அப்படிப்பட்ட ஒருவரை, 'கழற்போது இறைஞ்சி' என்கிறார் அடிகளார். அவனோ வடிவம் அற்றவன்; அவனுடைய கழற்போது இறைஞ்சி’ என்பது எவ்வாறு பொருந்தும்? இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பாடலின் மூன்றாவது அடியில், அடிகளார் குணங்குறி கடந்த அவன் யாவரும் காணப் பரிமேற் கொண்ட சேவகனாக வந்ததை எடுத்துக் கூறுகிறார். பரிமேல் ஏறிவரும் ஒருவனுடைய திருவடிகள் நிலத்துள் மறையாது, நிலத்திலிருந்து உயரமாக, குதிரையின் அங்கவடியில் நுழைக்கப்பட்டிருத்தலின் யாவரும் எளிதாக அதனைக் காணமுடியும். எனவே, கழற் போது இறைஞ்சி’ என்ற தொடரைப் 'பரிமேற்கொண்ட சேவகனார்’ என்பதன்பின்னர்க் கூட்டிப் பொருள்கான வேண்டும். குதிரைச் சேவகனின் திருவடிகளை இறைஞ்சியபின் என்ன நிகழுகின்றது என்பதைத் தெரிவர நின்று உருக்கி’ என்ற சொற்களால் வெளிப்படுத்துகின்றார். மாலும், அயனும் காணாத அத்திருவடிகள், இப்போது ஒரு குதிரையின் அங்கவடியில் புகுந்துள்ளன. மதுரை