பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அனைத்தையும் அழிக்கின்றவன் அவன் என்பதைச் சுட்டும் அடையாளமாக அவன் கையிலே தங்கியுள்ளது என்பதாம். 407 அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே 10 மனித மனத்தின் மற்றொரு கூறு இப்பாடலில் இடம்பெறுகிறது. பல சமயங்களில் சிறந்த அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கின்றது அம்மனம். ஏதோ ஒரு காரணத்தால் அந்த அனுபவம் தடைப்பட்டால் அல்லது முடிந்துவிட்டால் நியாயமாக என்ன நடைபெறவேண்டும்? அந்த அனுபவத்தைப்பற்றியே மீண்டும் சிந்திக்கத் வேண்டும். அதுவே மனத்தின் இயல்பாகும். ஆனால், அடிகளார் மனம் வேறுவிதமாக இயங்கத் தொடங்கிற்று என்று முதலிரண்டு அடிகளில் கூறுகிறார் அடிகளார். திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெறுகின்ற நேரத்தில் கிடைத்த அனுபவம், அதனை மணிவாசகர் அனுபவித்த முறை, அதன் பிறகு நிகழ்ந்த நிகழ்ச்சி ஆகியவை இங்கும் பேசப்பெறுகின்றன. - 'எனக்கு எவ்விதத் தகுதியும் இன்றேனும், என்பால் கருணைகொண்டு வந்து அளித்து வந்து, ஐயோ பாவம் (4) என்று என்மாட்டு இரங்கி ஆண்டாய். இயல்பாக ra -ಲೋಸ್ಡಿ பற்றிநின்ற அச்சத்தைப் போக்கினாய் அச்சம் தீர்த்த நின் அருளாகிய பெருங்கடலில் துளையமாட திளைத்து, நிறைவுண்டாகும்படி அருந்தி