பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அனைவரும் இவ்வாறு வாழ்வை மறந்து, குடிப்பெருமையை மறந்து, அறி மால் கொள்வரேல், அவர்கள் அனைவருடைய குடியும் கெடும். இறைவனை நேரே தரிசித்த (அறி மால் கொண்ட) ஒருவர் காரணமாக அவர்களுடைய சந்தததியனர்அனைவரும் பிறப்பிலிருந்து விடுபடுவர். அனைவரும் பிறப்பைத் துறப்பதால், அவர்கள் பரம்பரை தொடராது. ஆதலின் குடி கெடும்’ என்றார். இது இரண்டாவது நிகழ்ச்சி. இப்பொழுது சிம்மாசனத்தில் இருந்துகொண்டே எதிரே இருப்பவனைச் சாதாரணக் குதிரைச் சேவகன் என்று நினைந்து, அவனிடம் உரையாடிக்கொண்டிருக்கும் இந்தப் பாண்டி மன்னனுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்கிறார் அடிகளார். அவன் எதிரே கழுக்கடையேந்தி ஒளிப்பிழம்பாக வரும் சொக்கன் வடிவம் இல்லை; குதிரைச் சேவகனே சொக்கன்தான் என்று அறிந்து கொள்ளும் ஆற்றலும் பாண்டியனுக்கு இல்லை என்றாலும், மதுரையர் மன்னனாக உள்ள அவனுடைய வினை காரணமாக வரும் மறுபிறப்பு இல்லையாம்படி மறித்து ஆட்கொள்ளும் மேலே கூறப்பெற்ற எந்த ஒருநிலையையும் பாண்டியன் அடையாவிட்டாலும், குதிரைச் சேவகன் கருணையால் மதுரையார் மன்னனின் மறுபிறப்பு அவனைவிட்டு நீங்க அவனைத் தடுத்து ஆட்கொள்வார் (மறித்திடும்) என்கிறார். இந்நிகழ்ச்சி நடைபெறுகின்ற நேரத்தில் பாண்டியன் உயிரோடுதான் இருக்கின்றான். ஆனால், அவனுடைய மறுபிறப்பு அழிக்கப்பட்டதை அவன் உணரவில்லை என்றாலும், அடிகளார் உள்ளத்தில் அவன் பிறவி நீங்குகின்ற நிலை காட்சியளிக்கின்றது ஆதலால், மறுபிறப்பு ஒட மறித்திடுமே என்றார். இதனை அடுத்து அடிகளார் மனத்திரையில் மற்றொரு காட்சியும் தென்பட்டிருக்கவேண்டும். அதனால்தான்,