பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 259 நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் பரகதி பாண்டியற் கருளினை போற்றி - (திருவாச. 4, 213214) என்று பாடுகிறார். இத்தொடரிலுள்ள சிறப்பு என்னவென்றால், 'அருளினை’ என்ற இறந்தகால வினைமுற்று ஆகும். அப்படியானால் இதனை அடிகளார் பாடும்பொழுது பாண்டியன் இறையடி சேர்ந்துவிட்டானா? வரலாற்று ரீதியாக இதற்கு ஒரு முடிவு கூற வாய்ப்பு இன்றேனும் அருளினை என்ற இறந்த கால வினைமுற்றும் 527ஆம் பாடலில் வரும் 'ஒட என்ற எதிர்கால வினையெச்சம் எதிரெதிர் நோக்கும் ஆற்றலை அடிகளாருக்கு ஆலவாய்ச் சொக்கன் அருளியிருந்தான் என்று நினைக்க இடம் தருகிறது. 528. நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டிர் பார் இன்ப வெள்ளம் கொளப் பரி மேற்கொண்ட பாண்டியனார் ஓர் இன்ப வெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் பேர் இன்ப வெள்ளத்துள் பெய் கழலே சென்று பேணுமினே 3 'நிலையற்றதும் அழிவதுமாகிய உலகிடைக் காணப்படும் இன்பம் என்ற நீரில் குளித்துக் கும்மாளமிட விரும்புகின்ற உலகீர்! இந்த இன்பத்திற்கு மறுதலையாக நிலைபேறுடையதும், எல்லையற்றதுமாகிய பேரின்ப வெள்ளம் உள்ளது. அந்த இன்ப வெள்ளத்துள் உலகத்தையே மூழ்கித் திளைக்கச் செய்யப், பாண்டியனார் இறைவன்) பரிமேல் ஏறி இதோ புறப்பட்டுவிட்டார்.