பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 269 தன்னுடைய ഒr്)ങ്ങഖ് இல்லாத கருணையை நாம் உணருமாறு செய்து, அனுபவித்தே தீரவேண்டிய கொடுமையுடையதான நம்முடைய பிராரத்துவ வினையையும் போக்கி, பழைய வினைகள் காரணமாக உடல்மேலும் ஏனைய பொருள்கள்மேலும் மனத்திடைத் தோன்றும் பற்றையும் அறுத்தெறிந்தான். இவற்றையெல்லாம் செய்துவிட்டு இந்த ஆன்மாவை அப்படியே விட்டுவிடாமல் முடிவில்லாத ஆனந்தமாகிய வெள்ளத்தில் அழுத்திவிட்டான் என்க. இறைவனை வழிபடுகின்ற அடியவர்கள் இரு வகைப் படுவர். உலகத்திலுள்ள எல்லாப் பெருநன்மைகளும் தமக்குக் கிடைக்க வேண்டும் என்று வழிபடுவோர் மிகப் பலராவர். இவர்களுடைய பக்திகூடச் சில சமயங்களில் ஆழமானதாகவும் ஆட்டம் காணாததாகவும் இருக்கலாம். இவ்வளவு ஆழமான பக்தியைப் பெற்றிருந்தும் இம்மக்கள் பிறப்பு அறவேண்டும் என்றோ வீடுபேறு வேண்டும் என்றோ இறைவனிடம் வேண்டுவதில்லை. அதற்குப் பதிலாக உலக இன்பங்களில் நாட்டங்கொண்ட இவர்கள் அவற்றையே இறைவனிடம் வேண்டுகின்றனர். பெரும் கொடையாளி யாகிய இறைவன், இவர்களின் பக்தியின் ஆழத்தையும் தூய்மையையும் காணுகிறானே தவிர, அவர்கள் என்ன வேண்டுகிறார்கள் என்று கவலைப்படுவதில்லை. வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” (திருமுறை: 6:23-l) என்றார் நாவரசர் பெருமான். எனவே, இவர்கள் அரசப் பதவி வேண்டி வழிபட்டால் அதையும்கூடத் தருவான் என்ற கருத்தில் 'பாண்டிப் பெரும்பதமே தருவான்’ என்று கூறிய அடிகளார், இந்தப் பெரும்பதத்தில் வந்தபிறகு இதைவிட மேலாக உலகம் முழுவதையும் ஆளவேண்டும், மூன்று உலகங்களையும் ஆளவேண்டும் என்று சூரபதுமனைப்போல் வேண்டி