பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 சேவடி தீண்டினன் காண்க, சிவனென யானும் தேறினன் காண்க என்றே பர்டியுள்ளார். அதேபோல இங்கும் சீர் உடைக் கழலே சிவபெருமானே’ என்று பாடியுள்ளார் என்பதை எண்ணுக. 537. விடை விடாது உகந்த விண்ணவர் கோவே வினையனேனுடைய மெய்ப்பொருளே முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழுப் புழுக் குரம்பையில் கிடந்து கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே 2 'விண்ணவர் கோவே' என்பதன் முன்னர் விடை விடாது உகந்த என்று சொல்லியது நம் சிந்தனையைத் தூண்டுவதற்காகும். விண்ணவருள் ஒருவனாகிய இந்திரன் முதலானவர்கள் ஐராவதம் போன்ற ஊர்தியைப் பெற்று அதன்மிசை ஊர்கின்றனர். ஆனால், அவர்கள் தலைவனாகிய சிவபெருமான் ஒரு எருதைப் பற்றிக் கொண்டு அதனைத் தனக்கு உகந்த வாகனமாகவும் கொண்டு, அந்த ஊர்தியை விட்டு நீங்காதவனாகவும் உள்ளான். இது என்னே விந்தை ஐராவதம் போன்ற ஊர்திகள் மிகச் சிறப்புடையன ஆயினும், அதனை ஊர்பவன் எவ்விதச் சிறப்புமில்லாத இந்திரனாவான். அவனைப் பொறுத்தமட்டில் ஊர்தி சிறப்புடையது; ஊர்பவன் சாதாரணமானவன். அவனுக்கும் தலைவனாகிய இறைவனைப் பொறுத்தமட்டில் ஊர்தி சாதாரணமானது; ஆனால், ஊர்பவனோ பிரபஞ்ச காரணன. ‘எல்லா வினைக்கும் கொள்கலனாகவுள்ள என்னை வாழ்விக்கும் மெய்பொருளே! இந்த ஊன் உடம்பை