பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 281 மண்ணில் சாய்த்த பிறகும், இதே போன்ற மற்றோர் உடம்பைப் பெற்று நான் சீரழியாவண்ணம் (கடைபடா வண்ணம்) காத்து ஆள்பவனே! உன்னை எப்படிப் பிடித்துள்ளேன் தெரியுமா? உன்னைப் பிடித்தேன்; சிக்கெனப் பிடித்தேன்; இடைவிடாது சிக்கெனப் பிடித்தேன். இங்ங்ணம் பிடிபட்டதால் நீ என்னை விட்டு நீங்குமாறு எங்ங்ணம்?’ என்றவாறு. 538. அம்மையே அப்பா ஒப்பு இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத் தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே 3 பொழுதினைச் சுருக்கும்-காலத்தை வீணாக்கும். - உலகியல் வாழ்வில் மிகச் சிறந்துநிற்கும் உறவுமுறை தாய், தந்தை என்ற இரண்டுமாகும். எத்துணைச் சிறந்ததாயினும் தாய் தந்தையர் உறவுமுறையில் கிடைத்த இந்த உடம்பு, வினையைச் சுமக்கும் ஊர்தியாகும். இறைவன் தரும் வாழ்வு, வினையின் நீங்கிய வாழ்வாகும். எனவேதான், அம்மையே அப்பா என்று தொடங்கியவர் "ஒப்பிலா மணியே என்றார். ஒரு பொருள் தோன்றவேண்டுமானால் அதற்குரிய விதை, அதாவது மூலம் ஒன்றிருத்தல் வேண்டும். ஆர் அமுது என்று கூறியவுடன் எல்லோரும் அதனை விரும்புவர் என்று நன்கு விளங்கும். ஆனால், இந்த அமுது கிடைக்க வேண்டுமானால் அது தோன்றுவதற்குரிய மூலம் எது, நிலைக்களன் எது என்ற சிந்தனையில் ஈடுபடுபவதற்கு விடை கூறுவார்போல, 'அன்பினில் விளைந்த ஆரமுது'

  1. Lélé IV is