பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மனத்தி ல் கொண்ட அடிகளார் புகழ்ச்சியைக் கடந்த என்றார். அறிவினால் அறியப்படாமல் உணர்வினால் மட்டும் அனுபவிக்கப்படும் பொருளாதலின் போகமே என்றார். யோகம் என்பது பேரமைதியைத் தருவதாகும். இந்தப் பேரமைதியே முன்னர் இல்லாத பொலிவைத் தரும். புத்த தேவனுடைய விக்கிரகம் இந்த அமைதியின் அழகைப் புரிந்துகொள்ள ஒர் உபாயமாகும். இதனையே அடிகளார் யோகத்தின் பொலிவே என்கிறார். "மனம், சிந்தை என்பவற்றில், தெளிவு பிறந்த நிலையிலுள்ள அடியவர்களின் செல்வமே உன்னை இருள் இடத்துச் சிக்கெனப் பிடித்தேன்’ என்கிறார். அதாவது மயக்கம் நிரம்பிய இருள் சூழ்ந்துள்ள இந்த உலகிலேயே நம்பிக்கை ஒன்றையே துணையாகக் கொண்டு உன்னைச் சிக்கெனப் பிடித்துவிட்டேன்’ என்றவாறு. 540. ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா வீறு இலியேற்கு விழுமியது அளித்தது ஒர் அன்பே செப்புதற்கு அரிய செழும் கடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே எய்ப்பு இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே 5 "மெய்ப்பதம்’ என்பது உண்மையானதும் நிலை பேறுடையதும் ஆகிய நிலை என்ற பொருளைத் தரும். மெய்ப்பதம் எது என்பதை அறிந்துகொள்வதற்குக்கூட ஒரு திண்மை வேண்டும். அறிந்துகொண்ட பின்னர் அதனை அடைய முயல்வதற்கு மேலும் திண்மை