பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 285 வேண்டும். இதன் முற்பகுதியையே மெய்ப்பதம் அறியா வீறிலி என்றார் அடிகளார். \ இத்தகைய வீறிலியாகிய தம்மையும் ஒரு பொருட்டாக்கி விழுமியதாகிய அவனை அறியும் மெய்ஞ்ஞானத்தை அளித்தான். அதனைப் பெறுவதற்குத் தமக்குத் தகுதியின்றேனும் அதனை அளித்தான் என்றால், அது அவனுடைய கருணை காரணமாகவே ஆகும் என்பதைக் கூறவந்த அடிகளார் அவனை அன்பின் வடிவமானவன் என்கிறார். 'எய்ப்பு இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்பது கருவி, கரணங்கள், மனம், உள்ளம் ஆகிய அனைத்தும் செயலிழந்து, இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி நம்பிக்கை இழந்து தளர்வுற்ற நிலையில் உன்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன் என்பதாகும். 541. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு ஆண்டு அளவு இலா ஆனந்தம் அருளிப் பிறவி வேர் அறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே 6 அறவையேன்-துணையற்றவன், திறவுதிறப்பு, துணையில்லாத அனாதையாகிய நான் செய்வதறியாது திகைத்துநின்ற நிலையில், என் மனத்துட் புகுந்து, அதையே தான் தங்கும் திருக்கோயிலாகக் கொண்டு, எல்லையற்ற ஆனந்தத்தை எனக்கு அருளினான். அதுமட்டுமா செய்தான்? என் பிறவியையும் அல்லவா வேரொடு அறுத்தான். அத்தோடு விட்டானா? என் குலமாகிய