பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 291 இந்த ஆனந்தத்தை, அறிவிக்க உலப்பிலா ஆனந்தம்' என்றார். உள்ளொளி பெருகி உலப்பிலா ஆனந்தம் சொரியத் தொடங்கினால், அந்த உள்ளம் தங்கியிருக்கும் இந்த உடல் உருகத் தொடங்கிவிடும். ஊன் உருகுதல், உள்ளொளி பெருகுதல், உலப்பிலா ஆனந்தம் சொரிதல் என்ற மூன்றும் ஒரே அடியில் கூறப்பெற்றதேனும், முதலில் தோன்றுவது உள்ளொளி பெருகுதல் ஆகும். அதன் பயனாக ஊன் உருகுதலும், ஆனந்தம் சொரிதலும் நடைபெறுகின்றன. 'புறம்புறம் திரிந்த செல்வமே' என்ற தொடர் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது. செல்வமே என விளிப்பது இறைவனையே ஆகும். எங்கும் ஒருபடித்தாய் அனைத்திலும் ஊடுருவிநிற்கும் ஒருவனைப் புறம்புறம் திரிந்த என்று சொல்வது வியப்பல்லவா! தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. பட்டுப் புடைவையை இரவல் கொடுத்துவிட்டு, அதனை உடுத்தியவள் போகுமிடமெல்லாம் அவள் கீழே அமர்ந்து புடைவையைக் கெடுத்துவிடாமல் இருக்க, புடைவையின் சொந்தக்காரி ஒரு பலகையைத் துரக்கிக் கொண்டு போனாளாம். இக்கருத்தைப் பட்டுப் புடவையை இரவல் கொடுத்துப் பலகையைத் துரக்கிக் கொண்டு போனாளாம்’ என்ற முதுமொழிமூலம் அறிவித்தனர். அதேபோல, வழியோடு போன திருவாதவூரரைப் பிடித்து நிறுத்தி, அவர் உள்ளத்தில் உள்ளொளி பெருகச் செய்து, ஊனை உருக்கி, ஆனந்தத்தையும் சொரிந்த குருநாதர், இப்பொழுது மணிவாசகர் போகின்ற இடமெல்லாம் அவர் பின்னே போகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த மூன்றையும் செய்த குருநாதர் இவற்றின் அருமைப்பாட்டை அடிகளார் அறிந்து