பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 விருப்பத்தோடு அச்செயலில் ஈடுபடலாம். ஆனால் ஏற்றுக் கொள்பவர் விரும்பி ஏற்றுக்கொண்டால்தானே அடைக் கலம் முற்றுப்பெறும்? ஏற்றுக்கொள்பவரின் மனநிலை உறுதியாகத் தெரியாதபொழுது அடைக்கலமாகத் தம்மைத் தருபவர் பிடிவாதம் பிடித்தலுமுண்டு. "படைக்கலமாக" என்று தொடங்கும் நாவரசரின் விருத்தப் பாடலை நோக்குவோம். படைக்கலமாக உன் நாமத்து எழுத்து)அஞ்சு என் நாவிற் கொண்டேன் இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் து நீறு அணிந்து உன் 强 அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்து) அரனே, (திருமுறை: 4-81-8) இதில் இரண்டு புதிய கருத்துக்களைப் புகுத்துகிறார் நாவரசர் பெருமான். . முதலாவது, இடைக்கலம் அல்லேன் என்பதாகும். இது இப்பொழுது வழக்கொழிந்த சொல்லாகும். சுத்ந்திரம், அடைக்கலம் என்ற இரண்டிற்கும் இடைப்பட்டது இடைக் கலம் என்பதாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரிடம் அடைக்கலமாதல் இடைக்கலம் என்று பேசப் பெறும். இதுவே ஒற்றி என்று இன்று வழங்கப் பெறுகிறது. கையுடையும் இடைக்கலம் போலத்தான் என்றாலும் கையடையில் செல்வோர் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு இடம்தருவதில்லை. இடைக்கலமாகச் செல்பவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செல்வ தாயினும் அவருடைய முழு விருப்பத்தோடு, செல்வர்.