பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'திருப்பெருந்துறையில் குருவாக அமர்ந்திருந்த நீ. வழியோடு சென்ற என்னை வர் என்று குறிப்பால் அழைத்தாய் அழைத்ததோடு விட்டுவிடாமல் உன் திருவடிகளை நான் கண்ணாரக் கண்டு என் பிறப்பை அறுத்துக்கொள்ள அருள் செய்தாய்’ என்றபடி, 548. ஆதம் இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆ ஆ என்று ஒதம் மலி நஞ்சு உண்ட உடையானே அடியேற்கு உன் பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே 3 ஆதமிலி. ஆதரவு இல்லாதவர் 'கடல் நஞ்சை உண்ட பெருமானே! எவ்விதத் துணையுமின்றி மாறி மாறி பிறந்து இறந்து வரும் நரகம் போன்ற இப்பிறப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அழுந்திக் கொண்டிருந்த என்னை, 'ஆ ஆ என்று இரக்கச் சொல் கூறி, உன் திருவடிகளைக் காட்டியதன் மூலம் என்னை உய்வித்தாய்’ என்றவாறு. 549. பச்சைத்தாள் அரவு ஆட்டி படர் சடையாய் பாத மலர் உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே அச்சோ என் சித்தத்து. ஆறு உய்ந்த ஆறு அன்றே உன் திறம் நினைந்தே 4 தாள்- ஈரமாக உள்ள புற்று. 'புற்றினிடத்து வாழும் பாம்பை வைத்து ஆட்டுபவனே! பாதமலரைத் தம் தலையிற் சூடுபவர்களின் தலைவனே! அடியேனைக்கூட உய்யக்கொண்ட நின் பெருமையை அறியாதவர்கள் யாகங்கள் செய்து (எச்சத்தார்) சிறு தெய்வங்களாகிய தேவர்களை வந்திப்பர். என் தரம் பாராது ஆட்கொண்ட உன் திறத்தை நினைந்து அந்த வழியிலேயே என் சித்தத்தைச் செலுத்த, அதன் பயனாகப் பிறவிப்பெருங்கடலில் வீழாமல் உய்ந்தேன்' என்றவாறு.