பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 ° ®gar556 - ಈಖ ಕಿಣಣಣಹi – 4 553. மூத்தானே மூவாத முதலானே முடிவு இல்லா ஒத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் பூத்தானே புகுந்து இங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே 8 'மூத்தானே' என்பது யாவற்றுக்கும் மூத்த, ஆதி என்ற பொருளைத் தரும். முதலானே' என்பது வளர்ந்து செல்லும் புதுமையிலும், அவ்வளர்ச்சியின் நுனியில் இருக்கின்றவன் என்ற பொருளுடையது. மூவாத என்பது மூத்தவனாக இருந்தும் முதல்வனாக வளர்ந்தும் உள்ள நிலையிலும் மூப்பு என்பதே இல்லாதவன் என்ற பொருளைத் தரும். - வேதங்கள் நான்கு என்று பொதுப்படையாகச் சொல்லப்பெறினும், ஆயிரக் கணக்கான மறைகள் உண்டு. என்றே பெரியோர்கள் கூறியுள்ளனர். திருஞானசம்பந்தர் புராணத்தில் வரும் ஒதினார் புகலிவந்த புண்ணியனார் எண்ணிறந்த புனிதவேதம் சுருதி ஆயிரம் ஓதி! (பெ.பு. திருஞா-264,265) என்னும் பகுதியும், கம்பராமாயணத்தில் வரும் 'ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் (கம்ராயுத்தம்மந்திரம்-48) என வரும் பகுதியும் முடிவு இலாத ஒத்து என்பதை எடுத்துக்காட்டுவன ஆகும். இறைவன் வேதத்தில் வரும் சொற்களாகவும், அச்சொற்கள் குறிக்கும் பொருளாகவும் உள்ளான் என்பதை ஒத்தானே பொருளானே’ என்று குறிக்கின்றார். உண்மை-இன்மை என்ற முரண்பாடுகளினிடையே முழுமுதலைக் கண்டதுடன், இவை இரண்டுமே அவன்தான் என்பதை நம் முன்னோர் கூறியுள்ளனர். அதனையே இங்கு உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் எடுத்துக் கூறுகின்றார்.