பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப் புலம்பல் 307 558. உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் 'இனி அமையும் குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே 3 குரைகழல்-ஒலிக்கும் கழலணிந்த திருவடிகள் இரண்டாம் பாடலில் கூறப்பெற்ற முறையில் ஒரு துணை கிடைத்துவிட்டதால் அடிகளாருக்கு எல்லையற்ற மனஉறுதியும், துணிவும். தோன்றிவிட்டன. அதனால்தான், இப்பாடல் வெளிவருகின்றது. தமக்கென்றுள்ள உற்றார், தமக்கு உரியதாகிய ஊர் என்ற இவை இரண்டின் அடிப்படையில் கிடைக்கும் பெருமைபேர்) ஆகிய எதுவும் வேண்டியதில்லை என்று கூறியவர், மிகமிகத் துணிவோடு கற்றவர்கள் தொடர்பு கூடத் தேவையில்லை என்கிறார். கற்றார் என்பது இங்கு வெறும் ஏட்டுக்கல்விமட்டும் உடையவர்களைக் குறிக்கின்றது. இத்தகையவர்கள் தொடர்பு, இருந்தும் ஒன்றுதான் இல்லாமல்போனாலும் ஒன்றுதான். - இன்னும் ஒரு படி மேலே சென்று, கற்கவேண்டிய நூல்களைக்கூட இனிக் கற்கத் தேவையில்லை; கற்ற வரையில் போதும் என்பதைக் கற்பனவும் இனி அமையும்’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். ஏன் தெரியுமா? உண்மையான கல்வியின் பயன் உயிர்களிடத்து அன்பைப் வளர்த்துப் பெருக்கி, அந்த வளர்ந்த அன்பை இறைவன் திருவடிகளில் செலுத்துவதுதான். இறைவன் திருவடியில் அப்படி அன்பு செய்யும்போது உண்மையில் அந்த அன்பு இறைவன் திருவடியில் லயித்துள்ளதா என்பதை அறிய ஒரே ஒரு வழி உண்டு. அதாவது, அப்படி அன்பு செய்பவர் உள்ளம் உருகும், மனமும் உருகும். இவை இரண்டும் உள்ளே நிகழ்பவை. இதனை அடையாளம் கண்டுகொள்ள, புற்த்தேயும் ஒரு நிகழ்ச்சி நடைபெறும். அதுவே கண்ணிர் ஆறாகப் பெருகுதலாகும்.