பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்படிக் கசிந்துருகும் நிலை தமக்கு வேண்டும் என்று அடிகளார் கேட்கின்றார். ஆதலின், இது கிடைத்துவிட்ட பிறகு மேற்கொண்டு எந்த நூலையும் கற்கத் தேவை யில்லை. ஆதலால் கற்பனவும் இனி அமையும் என்றார். பேர் வேண்டேன்’ என்பதற்கு புகழ் வேண்டேன் என்று பொருள் கூறுவது சரியன்று. ஒருவர் உயிருடன் இருக்கும் காலத்து அவர் பிறந்த ஊர், பிறந்த குடி ஆகியவை காரணமாகப் பிறரால் பாராட்டப்பெறும் சொல்லே பேர் எனப்படும். இதனை ஆங்கிலத்தில் Name என்று கூறுவர். அடுத்து, ஒருவர் செய்த செயல் காரணமாக அவருக்குப் பின்னரும் பிறரால் அவரை ஏத்திச் சொல்லப்படும் சொற்களே புகழ் எனப்படும். இதனை ஆங்கிலத்தில் Fame என்பர். கன்று+ஆவின் மனம் என்று கூறுவதால், கன்றைப் பிரிந்து அக்கன்றை நினைந்து மனம் உருகிக் கண்ணிர் விடும் பசுவின் நிலையை அடிகளார். பல இடங்களில் கண்டிருத்தல் வேண்டும். கன்றுக்கும் பசுவுக்கும் உள்ள தொடர்பு மிக நெருக்கமானது; ஆயினும், இப்போது கன்று பசுவோடு இல்லையாதலால் அக்கன்றை நினைந்து பசு உருகுகிறது. இப்பாடல் பாடப்பெறும் நேரத்தில் அடிகளாருக்கு மிகவும் உறவு உடையதாகிய குருநாதரின் திருவடிகள் (குரை கழல்கள்) அடிகளாரின் எதிரே இல்லாமையால் அத்திருவடிகளின்மாட்டுக் கொண்டுள்ள ஈடுபாடு குறைந்துவிட்டதோ என்று அஞ்சுகிறார். அதனால்தான் கன்றைக் காணாதவிடத்து உருகும் பசுவின் மனநிலை நினைவிற்கு வருகிறது. கன்றைக் காணாவிடத்து இந்தப் Lsér கொள்ளும் அவ்வளவு உருக்கமும் குரைகழலைக் காணாவிடத்தும் தமக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றார். ஆதலின் குரைகழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே என்கிறார். ওঁ ওঁ ওঁb