பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கிடைத்தது என்பதை ஒரு வார்த்தையுட் படுத்தினாய்’ என்று விளக்கினார். - இதற்கு முன்னர்ப் பல பாடல்களில் நாயினும் கடையேன்” என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அடிகளார், ஒரு புதிய கருத்தை 400 ஆவது பாடலில் வெளியிடுகிறார். இந்தப் பாடலில் ‘புலையனேன்' என்று தொடங்கி, 'தலையினால் நடந்தேன்’ என்று கூறுவது அவருடைய எண்ண ஓட்டங்களை எடுத்துக்காட்டுகின்ற இரண்டு தொடர்களாகும். இயல்பாகத் தம்மைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் கீழானவன் என்ற கருத்துப்படப் பேசும் அடிகளார், இப்பாடலில் ‘புலையனேன்’ என்று தொடங்குவது பொருத்தமானதேயாகும். ஆனால், புலையனேன் என்று தொடங்கும் எழுவாய், களித்துத் தலையினால் நடந்தேன்’ என்றல்லவா முடிகிறது? புலையனேன் என்று தம்மைப்பற்றிப் பேசிக்கொள்ளும் ஒருவர் திடீரென்று தலையால் நடந்தேன் என்று கூறுவாரேயானால், இவ்வாறு நடக்க ஏதோ ஒரு புதுமையான நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும். அந்நிகழ்ச்சி காரணமாகவே களிப்பு ஏற்பட்டது என்பதை எளிதாக அறிந்துகொள்ளமுடியும். அந்நிகழ்ச்சி என்ன என்பதை இந்த எழுவாய்க்கும் பயனிலைக்குமிடையே மிகச் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் கூறிவிடுகிறார். 'பொருள் என நினைந்து உன் அருள் புரிந்தனை, புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன்’ என்ற தொடரிலுள்ள ஒவ்வொரு சொல்லும் சிந்திக்க வேண்டியதாகும். - 'உன் அருள் புரிந்தனை” என்பதில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசப்பெறுகிறது. புலையனாகிய தம்மைக்கூட ஒரு பொருள் என மதித்து அருள்புரிந்தார் அல்லவா? அடிகளாருக்கே உரிய முறையில் இதுபற்றிப் பேசியிருந்தால்,