பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 321 'அறுக்கிலேன் உடல்துணிபட' (403) என்று உணர்ச்சி வேகத்தில் செத்திலாப் பத்தில் பேசத் தொடங்கியவர் தமக்கு அந்த உரிமையில்லை என்பதை உடன் கண்டுகொண்டார், தம்பாலுள்ள இந்த உடம்பு தமக்குப் பயன்படவில்லை; அதை அறுத்து ஒழிக்கலாம் என்றால், அதற்கு உரிமையும் இல்லை. இந்த நிலையில்தான் 'செத்திடப் பணியாய் என்று வேண்டிக்கொண்டார். அதுதானும் நடந்தபாடில்லை. எனவே, பாராமுகமாக இருக்கும் தலைவனிடம் ஐயா! நான் என்ன சொல்லியும் உன் காதில் ஏறவில்லை. இப்பொழுது ஒன்று சொல்லுகிறேன் கேள். நீ எவ்வளவுதான் வாயை மூடிக்கொண்டு இருந்தாலும், நீ என் உடையான்; நான் உன் அடைக்கலம். பிரபஞ்சம் முழுவதையும் படைத்துக் காக்கும் உனக்கு அதில் வாழும் சிற்றுயிராகிய என்னை இனங் கண்டுகொள்ளவோ, உன் அடைக்கலம் என்பதை அறிந்துகொள்ளவோ நேரம் இருக்காதுதான்! ஆகவே, நான் உன் அடைக்கலம் என்பதை இப்பொழுது திருப்பித் திருப்பிச் சொல்வதன்மூலம் உன் கவனத்தை என்பால் ஈர்க்க விரும்புகின்றேன். "ஐயா! மிகப் பலர் நீயே தலைவனென்று சொல்லி அடியராக நின்பால் அடைந்துள்ளனர். அவர்களில் நானும் ஒருவன். "மொத்தமாக ஒரு பொருளை வாங்கும்போது அதில் ஏதோ ஒன்றிரண்டு சொத்தையாகவோ, அழுகியதாகவோ இருக்கலாம். மொத்தமாக வாங்கிவிட்ட பிறகு, இதை மட்டும் தனியே எடுத்துத் துார எறிந்தாலும் கணக்கில்தான் சேர்ந்துவிடும். மொத்தமாக வாங்கிய கணக்கில்தான் சொத்தையும் அழுகலும் இடம்பெற்றுள்ளன. '(பழுத்த மனத்து அடியார்கள்) கமலம்போன்ற உன் திருவடிகள் அடைந்தவர்கள்; உன்னோடு வந்து சேர்ந்து