பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'இன்னமுமொன்று சொல்லட்டுமா? இந்தப் பாம்பும் கங்கையும் உன்பால் அடைக்கலமென்று வரவில்லை. வெறுப்பனவே செய்யும் அவற்றை நீயே அன்போடு ஏற்றுக்கொண்டாய். அவற்றிலிருந்து நான் மாறுபட்டவன் என்பதை உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அவை இரண்டும் உன்னை உடையானென்று ஏற்றுக் கொண்டனவோ, இல்லையோ தெரியாது. ஆனால், நான் உன்னை உடையான் என்று ஏற்றுக்கொண்டு உன்னிடம் அடைக்கலமாகவும் வந்துள்ளேன்’ என்ற மிகப் பெரிய கருத்தை மிக்க சமத்காரத்துடன் அடிகளார் இந்தப் பாடலில் (409) கூறியுள்ளார். 'வெறுப்பனவே செய்யும்’ என்று பொதுவாகக் கூறினாரேனும் வெறுக்கத்தக்க செயல்கள் tLffT6ö){5).4 என்பதை 41, 412, 413, 414 ஆம் பாடல்களில் விரிவாகக் கூறுகின்றார். வெறுக்கத்தக்க செயல்கள் பல உண்டேனும் அவற்றுள் பலவற்றை உறுதிப்பாடு, கட்டுப்பாடு என்பவற்றை மேற்கொண்டால் தடுத்து நிறுத்திவிட முடியும். ஆனால், இந்தப் பால் உணர்வைப் போக்குதலோ, கட்டுப்படுத்துதலோ ஏறத்தாழ இயலாத காரியம். அதனை ஒரளவு விரிவாக்கி மேற்குறித்த நான்கு பாடல்களிலும் பேசுகின்றார். 41, 412, 413, 414 ஆகிய நான்கு பாடல்களில் பாலுணர்வால் விளையும் இடுக்கண்பற்றிப் பேசுகின்றார் பாடல் முறையில் முன்பின்னாக அமைந்திருப்பதால் அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்திக் காண்டல் நலம். இடர்க்கடல்வாய், மாதர் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன்’ (41), மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப் புன்கணனாய்ப் புரள்வேனை' (414) மாழை மைப் பாவிய கண்ணியர் வன்மத்திட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன்' (48) சுருள்புரி கூழையர்