பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வெளிப்படுத்திவிட்டார். சிலப்பதிகார நிகழ்ச்சி முழுவதும் இந்த இரண்டு சொற்களின்மேல் கட்டப்பட்டிருக்கிறது. இதேபோல மகளிர் மயக்கத்தால் வரும் துன்பத்தை விளக்கவந்த அடிகளார். 'உன் திறம் மறந்து என்ற தொடரால் இதனை வெளிப்படுத்தியுள்ளார். 410 ஆம் பாடல் முழுவதிலும் இறைவன் பெருமை விரித்துப் பேசப்பெறுகிறது. பெரும்பெருமான்’ என்று தொடங்கியவர் அவன் எவ்வளவு பெரியவன் தெரியுமா என்பதற்கு ஒர் எல்லை வகுப்பவர்போல, மூன்றாம் நான்காம் அடிகளில் மலரோன், நெடுமால் அறியாமல் நின்ற அரும்பெருமான்' என்று பாடுகின்றார். இவ்வளவு பெரியவன் என்ன செய்தான் தெரியுமா? என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தந்தான். ஆனால், அதுபற்றி எனக்கொன்றும் தெரியாது. மிகச் சாதாரணமான நான் கூடத் தெரிந்துகொள்ளும் முறையில், நான்முகன் மால் அறியாதவர் என் மனத்தினுள்ளே வரும் பெருமானாக நான் காணுமாறு வந்தான். அதுவே அவனது எளிவந்த தன்மைக்கு (செளலப்பியத்திற்கு எடுத்துக்காட்டாகும். என்னுள் புகுந்து என்னைப் பெரும் பிச்சனாக்கிய காரணத்தால் அவன் உடையான் ஆயினான்; நான் உடைமையாயினேன். சாதாரணமாக, உலகியலில் வாழ்பவர்கள் நரகத்திற்குச் செல்லுதல் என்பதை நினைத்தவுடனேயே நடுங்குவர். ஆனால், தம்மை உடையானை யாரென்று தெரிந்து கொண்ட பிறகு, தாம் அவனுக்கே அடைக்கலமாகிவிட்ட பிறகு மிக்க பெருமிதத்தோடு, ‘என்னை நீ அழைத்துக் கொண்டாலும் சரி, அல்லது நரகத்துள் பிடித்துத் தள்ளினாலும் சரி எது செய்யினும் அதனை ஏற்றுக் கொள்ளுகிறேன்' என்ற கருத்தில் கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் (415) என்றுபாடுகிறார்.